Browsing: ஆரோக்கியம் | Health

ஜிம்மை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்! | Visual Story

Gym (Representational Image)பலருக்கும் ஆரோக்கியத்தின் மீதான விழிப்புணர்வும், ஃபிட்னஸ்ஸில் ஈடுபாடும் அதிகரித்ததன் விளைவாக, தெருவெங்கும் பல உடற்பயிற்சி நிலையங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. எனவே, நீங்கள் ஜிம்மை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.முதலில் ஜிம்முக்கும் உங்கள் வசிப்பிடத்துக்கும் உள்ள தொலைவை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக தூரத்தில் உள்ள ஜிம்மை தேர்வு செய்தால், போக்குவரத்து சிரமங்கள் ஏற்படலாம். அதனாலேயே ஜிம் செல்வது தடைபடலாம். அதனால் அருகில் இருக்கும் ஜிம்மை தேர்வு செய்வது நல்லது.சில நாள்களுக்குள் உடல்…

முகத்தில் உள்ள அம்மைத் தழும்புகளை நீக்க முடியுமா? | Is it possible to remove scars on the face?

இத்தகைய ஆழமான, பழைய வடுக்களையும் தழும்புகளையும் வெறும் க்ரீமை மேல்பூச்சாகப் பயன்படுத்தி ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ மாற்றுவது சாத்தியமில்லை. அது பலவித சிகிச்சைகளை உள்ளடக்கி அணுகப்பட வேண்டியது.அதாவது, மேல்பூச்சுக்கு க்ரீமும் உபயோகிக்க வேண்டியிருக்கும். லேசர் அல்லது மைக்ரோ நீட்லிங் அல்லது ஃபில்லர்ஸ் போன்ற சிகிச்சையையும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். தழும்பின் ஆழத்தின் தன்மையைப் பார்த்துதான் அதை முடிவுசெய்ய முடியும்.சருமப் பாதுகாப்பு – சித்தரிப்பு படம் ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் பிரச்னை மற்றும் அதன் தீவிரத்தைப் பொறுத்தே சிகிச்சையைத்…

Doctor Vikatan: முகம், முதுகு, இடுப்புப் பகுதிகளிலும் பரவும் பருக்கள்… காரணமென்ன? | What causes pimples to spread

Doctor Vikatan: என் வயது 21. தலையில் பொடுகு அதிகமிருக்கிறது. அது மட்டுமன்றி முகத்திலும் இடுப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் பருக்கள் அதிகமிருக்கின்றன. நான் தினமும் மேக்கப் உபயோகிக்கிறேன். மேக்கப்பை தாண்டி பருக்களின் தொந்தரவு வெளியே தெரிகிறது. இதற்குத் தீர்வு என்ன?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் செல்வி ராஜேந்திரன்டாக்டர் செல்வி ராஜேந்திரன்பொடுகுக்கும் பருக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பருக்கள் இருந்தால் தலையில் பொடுகு இருக்கிறதா எனப் பார்த்து உடனடியாக சரி செய்ய வேண்டியது அவசியம். பொடுகை நீக்கும்…

பித்தப்பை பிரச்னைக்கு தீர்வு என்ன? | What is the solution to the gallbladder problem?

நன்றி குங்குமம் டாக்டர் இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவுகூட பித்தப்பைக்கு நாம் தருவதில்லை. ஆனால், இது செய்யும் வேலை எளிதானது அல்ல. நாம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புமே முக்கியம் என்றாலும் பித்தப்பை எந்த ஒரு முக்கிய உறுப்புக்கும் இணையான மகத்தான பணியைச் செய்கிறது என்றால் அது மிகையில்லை.உண்மையில் சாதாரண ஒரு வாயுப் பிடிப்பால் இதயப் பகுதியில் மிக மெலிதான வலி இருந்தால்கூட பதறிப்போகும் நாம்,…

Doctor Vikatan: குழந்தைக்குத் திட்டமிடுபவர்கள் வொர்க் அவுட் செய்யலாமா?

எனக்குத் திருமணமாகி 9 மாதங்கள் ஆகின்றன. ரெகுலராக ஜிம் சென்று வொர்க் அவுட் செய்வது என் வழக்கம். அடுத்து குழந்தைக்குத் திட்டமிடுவதால் ஜிம் செல்வதை நிறுத்தச் சொல்கிறார்கள் வீட்டில். வொர்க் அவுட் செய்வது கருத்தரிப்பதை பாதிக்குமா? குழந்தை பெறும் திட்டத்தில் இருப்பவர்கள் எப்படிப்பட்ட உடற்பயிற்சிகளைச் செய்யலாம்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்?PregnancyDoctor Vikatan: வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ். திருமணமாகி 9 மாதங்கள் ஆவதாகக்…

ஆர்கானிக் அறிவது எப்படி? | How to know organic?

நன்றி குங்குமம் டாக்டர் ‘எங்க வீட்டுல எல்லாமே ஆர்கானிக்தான்‘ என்று சொல்வது இப்போதைய ட்ரெண்டாகிவிட்டது. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் பேஸ்ட்டில் இருந்து படுக்கப்போகும் போது ஏற்றும் கொசுவத்தி வரை சகலமும் ஆர்கானிக்கில் வந்துவிட்டது. வாடிக்கையாளர்களின் இந்த ஆர்கானிக் மோகத்தைப் புரிந்துகொண்ட நிறுவனங்கள் விதவிதமான ஆர்கானிக் பொருட்களை சந்தையில் இறக்கி கல்லா கட்டுகின்றன. ரேப்பரில் விதவிதமான வகையில் எழுதப்பட்டிருக்கும் ஆர்கானிக் பொருட்களுக்கு என்ன அர்த்தம்?எதுவெல்லாம் அசல் ஆர்கானிக்… வாங்க பார்க்கலாம்!100% ஆர்கானிக் இப்படி அச்சிடப்பட்டிருந்தால் இவை முழுமையான…

T2DM… சர்க்கரை நோயை வெல்ல! | Beat T2DM Diabetes!

நன்றி குங்குமம் டாக்டர் டைப் 2 டயாபடீஸ் மெல்லிடஸ் என்பதன் சுருக்கமே T2DM (Type 2 Diabetes Mellitus). ஒரு காலத்தில் பணக்கார வியாதி என்று கருதப்பட்ட இது இன்று, வாழ்க்கை முறை சீரழிவுகளால் எளிய குடும்பங்களைச் சேர்ந்த 30+ வயதினரிடையேகூட அதிகமாகக் காணப்படுகிறது.* T2DM என்பது உடலில் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாத அல்லது போதுமான அளவு இன்சுலினைப் பயன்படுத்தாத ஒரு குறைபாடு. * இந்தக் குறைபாடு காரணமாக, உடலின் குளுக்கோஸ் ஆற்றலுக்காக செல்லுக்கு அனுப்பப்படுவதில்லை.…

ஒற்றைக் காலில் உங்களால் எத்தனை நொடிகள் நிற்க முடியும்? ஆரோக்கியம் கணிக்கும் ஆய்வு! I Balancing on one leg for 10 seconds could reveal health condition

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவரும், தங்களின் ஒற்றைக் காலில் நின்று, மற்றொரு காலை நிற்கும் காலுக்கு பின்னால் நீட்டி, கைகளை சேர்த்தபடி, கண்களை நேராக நோக்கி 10 விநாடிகள் வரை நிற்க வேண்டும். இரண்டு கால்களிலும் மூன்று முயற்சிகள் வரை செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டன.ஆனால், இச்சோதனையில்ந்ல் ஒருவரால் நிற்க முடியாமல் போனது. `ஒற்றைக் காலில் நிற்க முடிந்தவர்களை ஒப்பிடுகையில், நிற்க முடியாதவர்கள் அடுத்த 10 வருடங்களில் இறப்பை விரைவில் எதிர்கொள்வதற்கான ஆபத்து 84 சதவிகிதம் அதிகம் உள்ளது. அதேபோல்…

`குரங்கு அம்மை’க்கு புதிய பெயர் வைக்கப்படும் என அறிவித்துள்ள WHO; என்ன காரணம்? I WHO may change a new name to Monkeypox soon

ஆனால் பெரும்பாலான தொற்று நோய்கள் ஆப்பிரிக்காவில் இருந்துதான் பரவுகிறது என்ற பொதுவான எண்ணம் மக்களிடையே உருவாகி விடுகிறது. குரங்குகளை ஆப்பிரிக்க மக்களோடு தொடர்புபடுத்தி பேசும், பல கடந்த கால கசப்பான வரலாற்று சம்பவங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.எனவே எந்த ஒரு நோயையும், குறிப்பிட்ட நாடு அல்லது பகுதியை வைத்து தொடர்பு படுத்தாமல், அந்த தொற்று வைரஸின் பெயரோ அல்லது அதன் திரிபுகளையோ வைத்து குறிப்பிடுவது நல்லது.ஆப்பிரிக்காAPஇதன் அடிப்படையில், ’குரங்கு அம்மை’ தொற்றின் பெயரை மாற்றுவதற்காக 29 அறிவியலாளர்கள் உலக…

வலியில்லை, பயமில்லை; மார்பகப் புற்றுநோயை கண்டறியும் ரத்தப் பரிசோதனை இந்தியாவில் அறிமுகம் |Blood test to detect breast cancer in India

இந்நிலையில், மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் ரத்தப் பரிசோதனை, இந்தியாவில் ஜூன் 22-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Easycheck breast என்ற இந்தப் பரிசோதனையைச் செய்ய 6,000 ரூபாய் வரை செலவாகும். ஆரம்பகட்டமாக இந்த ரத்தப் பரிசோதனை, அப்போலோ மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இன்னும் 1,600 ரத்தச் சேகரிப்பு மையங்களிலும் இச்சோதனையைக் கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.ஏற்கெனவே ஐரோப்பா போன்ற 15 நாடுகளில், வெவ்வேறு பிராண்டுகளின் பெயர்களில், இச்சோதனை செய்யப்பட்டு வருகிறது. இச்சோதனையின் நம்பத்தன்மை குறித்த சந்தேகம் மக்களுக்கு இருக்கும்.…

1 189 190 191 192 193 211