Doctor Vikatan: ஃப்ளு தடுப்பூசி அவசியமா? கொரோனாவா, ஃப்ளுவா என எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது? | doctor vikatan – How to find difference between Corona and Flu
Doctor Vikatan: எங்கு பார்த்தாலும் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பாக இருக்கிறது. ஃப்ளூ காய்ச்சல் என்கிறார்களே…. அதுதானா? ஃப்ளூ தடுப்பூசி போட்டுக்கொள்வது இந்நிலையில் அவசியமா? எந்த வயதில் போட்டுக்கொள்ள வேண்டும்? இது ஃப்ளூதானா அல்லது கொரோனாவா என வேறுபடுத்திப் பார்க்க முடியுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி. பூங்குழலிஇன்ஃப்ளுயென்ஸா என்பதன் சுருக்கமே ஃப்ளு. இது ஒருவகையான வைரஸ் தொற்று. சளி, காய்ச்சல் பாதிப்பு என பேச்சுவழக்கில் சொல்வது இந்த ஃப்ளுவை தான்…






