Browsing: ஆரோக்கியம் | Health

போக்சோ விசாரணை: “நாய் கூண்டு போல விட்னஸ் பாக்ஸ் உள்ளது…” கேரள உயர் நீதிமன்றம்! | witness box for POCSO case victims worse than kennels

போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்களை ஜனவரி 8 திங்கள்கிழமையன்று பரிசீலித்த நீதிபதி சோபி தாமஸ், விட்னஸ் பாக்ஸ் குறித்த தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அவர் கூறுகையில், “போக்ஸோ நீதிமன்றங்களில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் சாட்சி சொல்ல இடம் உள்ளது. குழந்தைகள் சாட்சி சொல்ல இருக்க வைக்கப்படுகிற இடம் வெளிச்சம்கூட புகாத அளவுக்கு இறுக்கமாக நாய்க்கூண்டைப் ( dog kennels) போல் உள்ளது.  நாய்க்கூண்டிலாவது வெளிச்சம் உள்ளே வரக்கூடிய அளவுக்குக் கம்பிகள் உள்ளன. இங்கு குழந்தைகள் மூடிய இடத்துக்குள் இருக்க…

“மனைவி எட்டி உதைச்சிட்டா டாக்டர்…'' – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 133

முதலிரவில் ஆரம்பித்து, தொடர்ச்சியாக மனைவி தாம்பத்திய உறவுக்கு மறுத்தால், சம்பந்தப்பட்ட கணவனுக்கு விவரிக்க முடியாத அளவுக்கு ஏமாற்றமும் கோபமும் ஏற்படும். அந்த உணர்வுகளை சற்று தள்ளி வைத்துவிட்டு யோசித்தால், மனைவியிடம் மனம் விட்டுப் பேசினால், பிரச்னை தீர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். இதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரியுடன் தீர்வுகளையும் விவரிக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ”அந்த இளைஞருக்கு திருமணமாகி ஒருமாதம் தான் ஆகியிருந்தது. மனைவியையோ, வேறு குடும்பத்தினரையோ உடன் அழைத்து வராமல் தனியாக வந்திருந்தார். செக்ஸ் பிரச்னைக்காக முதல்முறை என்னை சந்திக்க…

`கருவை பாதிக்கும் பிளாஸ்டிக்’… 1 லிட்டர் பாட்டில் தண்ணீரில் 2,40,000 பிளாஸ்டிக் துகள்கள் – ஆய்வு!|1-Litre Bottle Of Water Contains Some 2,40,000 Plastic Fragments

அமெரிக்காவின் பிரபலமான மூன்று பிராண்டுகளில் இருந்து சுமார் 25 ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை வாங்கினர். வாங்கிய பாட்டில் தண்ணீரை ஆய்வு செய்கையில், ஒவ்வொரு லிட்டரிலும் 1,10,000 முதல் 3,70,000 சிறிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதைக் கண்டறிந்தனர், அவற்றில் 90% நானோ பிளாஸ்டிக்குகள். `ஒரு லிட்டர் (33 அவுன்ஸ்) பாட்டில் தண்ணீரில் சராசரியாக 2,40,000 பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன’ என்று ஆய்வில் தெரிந்தது. எந்தெந்த பிராண்டுகளை ஆய்வு செய்தனர் என்பதைத் தெரிவிக்க ஆராய்ச்சியாளர்கள் மறுத்துவிட்டனர். தண்ணீர் பாட்டில் (சித்தரிப்பு…

`இஸ்லாமிய பெண் மறுமணம் செய்தாலும், முதல் கணவரிடம் மெஹர் பெற உரிமை உண்டு’ – மும்பை உயர்நீதிமன்றம்! | “Islamic women’s right to receive mahr” Bombay High Court orders

ஒரு முஸ்லிம் தம்பதியினருக்கு 2005-ல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். 2008-ல் இவர்களுக்கு விவாகரத்தானது. 2012-ல் அந்தப் பெண் இஸ்லாமிய பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் பிரிவு 3-ன் கீழ் பராமரிப்பு தொகைக்காக விண்ணப்பித்து இருக்கிறார். இந்தச் சட்டத்தின்படி, ஓர் இஸ்லாமிய பெண்ணின் திருமண பந்தம் முடிவுற்ற பின், மூன்று மாதங்களுக்குள் மெஹர் பெற உரிமை உண்டு. இது இத்தாத் காலம் (Iddat period) என்று அழைக்கப்படுகிறது.2014-ல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அப்பெண்ணுக்கு மொத்த தொகையாக…

MGM 'VARAM': TRAP’ நிலையிலிருந்து தாய் மற்றும் சேயை காப்பாற்றிய எம்ஜிஎம் ஹெல்த்கேரின் ‘வரம்'.

இரட்டை தலைகீழ் தமனி ஊடுருவல் (டிராப்) என்ற மிக அரிதான பாதிப்புடன் அதிக இடர்வாய்ப்பிலிருந்த கர்ப்பவதிக்கு வெற்றிகர சிகிச்சை வழங்கப்பட்டிருப்பதை எம்ஜிஎம் ஹெல்த்கேரின் பெண்களுக்கான பிரத்யேக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மையமான வரம், அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. பங்களாதேஷை சேர்ந்த Rh இந்த பெண்மணியின் இரத்த புரதம் வளர்கருவின் இரத்த புரதத்திற்கு இணக்கமில்லாத நிலை இருந்ததால் இதற்கு முன்பு மூன்று பச்சிளம் குழந்தைகள் உயிர் பிழைக்கவில்லை. இத்தகைய நிலையில், உயிருள்ள ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க எம்ஜிஎம் ஹெல்த்கேரின் சிகிச்சை…

MGM: 7 வயது குழந்தைக்கு மூளையில் பைபாஸ் அறுவைசிகிச்சை; பெருமையுடன் அறிவிக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேர்!

சென்னை மாநகரின் பன்முக சிறப்பு பிரிவுகளுடன் சிறப்பான சேவையாற்றி வரும் உயர்நிலை மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர், ஆந்திரப்பிரதேஷைச் சேர்ந்த 7 வயதே ஆன சிறு குழந்தைக்கு ஏற்பட்டிருந்த மோயாமோயா என்ற அரிதான நோய்க்கு சிகிச்சையளிக்க மூளையில் பைபாஸ் (மூளையில் மறுநாளப்பெருக்கம்) சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருப்பதை பெருமையுடன் அறிவித்திருக்கிறது. குழந்தைப் பருவத்தின் போது பொதுவாக ஏற்படக்கூடிய இந்த அரிதான நிலையானது, ஏறக்குறைய 10 இலட்சம் நபர்களில் ஒருவரை பாதிக்கிறது. எம்ஜிஎம்பக்கவாதம் மற்றும் வலிப்புத்தாக்க நிகழ்வுகள் பலமுறைகள் ஏற்பட்டதற்குப் பிறகு 2023…

ராமர் கோயில் திறப்பு விழாவன்று குழந்தை; ஜனவரி 22-ல் பிரசவத்துக்கு நாள் குறிக்கும் கர்ப்பிணிகள்!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22-ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்கிறார். கர்நாடகாவில் தயாரிக்கப்பட்ட ராமர் சிலை அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. கோயில் திறப்பு விழாவுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் அயோத்திக்கு வருகின்றனர். இந்நிலையில், ராமர் கோயில் திறக்கப்படும் நாளில் குழந்தை பெற்றுக்கொள்ள, பல கர்ப்பிணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கான்பூரில்…

விரதமிருக்கும் நாள்களில் தலைவலி அதிகரிப்பது ஏன்? I| Doctor Vikatan: Why do I get headache on fasting days?

Doctor Vikatan: நான் வாரத்தில் ஒரு நாள் விரதம் இருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். விரதம் இருக்கும் நாள்களில் எனக்கு தலைவலி வருகிறது… சில நாள்களில் அது ரொம்பவே அதிகரிக்கிறது. இதற்கு விரதம் இருப்பதுதான் காரணமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.ஷைனி சுரேந்திரன்விரதமிருப்பதற்கு என்னதான் பலன்கள் இருந்தாலும் சிலருக்கு அது ஏற்றதல்ல. அதன்படி நீங்கள் கீழ்க்குறிப்பிட்ட பிரிவுகளில் வருபவர் என்றால் விரதம் இருக்கவே கூடாது. Source link

“கொஞ்சம்கூட ஃபீலிங்கே இல்லாம இருக்கா…” – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -132 | Sexual guidance for newly married couple

தாம்பத்திய உறவில் ஒரு விஷயத்தை கணவர் விரும்பி, அதே விஷயத்தை மனைவி விரும்பவில்லை என்றால், அவர்கள் உறவில் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்யும். அதுபோன்ற ஒரு கேஸ் ஹிஸ்டரியை பற்றி இன்றைய கட்டுரையில் விவரிக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். “‘அந்த தம்பதியர் என்னை சந்திக்க வருகையில் மிகுந்த சோர்வாக இருந்தார்கள். அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறு புதிதாக திருமணமானவர்கள் என்பதைச் சொல்லியது. யார் முதலில் பேசுவது என்கிற யோசனையுடன் அமர்ந்திருந்தவர்களிடம், ‘என்ன பிரச்னை’ என்று…

Doctor Vikatan: கேட்கும் திறனில் பிரச்னை உள்ளவர்கள், அதிக சத்தத்துடன் பேசுவார்களா? | Do people with hearing problems speak louder?

Doctor Vikatan: சிலர் போனிலும் சரி… நேரிலும் சரி… அதிக சத்தத்துடன் பேசுவதைப் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம்… காது கேட்கும் திறனில் குறைபாடு உடையவர்கள் இப்படிப் பேசுவார்கள் என்பது உண்மையா?பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை மிகவும் மெதுவாகப் பேசினாலே மற்றவருக்குக் கேட்கும் என்ற நிலையிலும் சிலர், உரத்த குரலில் எல்லோருக்கும் கேட்பதுபோல பேசும் பழக்கம் கொண்டிருக்கலாம்.  Source link

1 13 14 15 16 17 213