Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: `ஓவர் திங்க்கிங்’ மூளையை பாதிக்குமா, மூளைக்கு ரெஸ்ட் அவசியமா?

நம்மில் யாரும் மூளையை 100 சதவிகிதம் உபயோகிப்பதில்லை என்பதுதான் நிஜம்.  30 முதல் 40 சதவிகிதம்தான் பலரும் பயன்படுத்துகிறார்கள்.  எவ்வளவு பெரிய விஞ்ஞானி, அறிவாளியாக இருந்தாலும் அவர்களும் மூளையை 100 சதவிகிதம் உபயோகித்திருக்க வாய்ப்பில்லை. எல்லோரும் 50 முதல் 60 சதவிகிதம் மட்டுமே உபயோகிப்பார்கள். மூளைக்கு முழுமையாக வேலை கொடுத்தால்தான் அது முழு ஆரோக்கியத்துடன் இருக்கும். மூளையானது 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டேதான் இருக்கும். அதற்கு, பாசிட்டிவ் சிந்தனை, ஆரோக்கிய உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, அதிக இனிப்பு, உப்பு தவிர்த்தல்,…

Apollo: ‘எண்டு-ஓ செக்’-ஐ அறிமுகம் செய்த அப்போலோ!

பெண்களுக்கு புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான செயல்திட்டத்தின் மீது அர்ப்பணிப்புடன் செயல்படும் அப்போலோ கேன்சர் சென்டர் (ACC) மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC) எண்டு-ஓ செக் (End-O Check) என்ற ஒரு செயல்திட்டத்தை நேற்று தொடங்கியிருக்கிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான விரிவான செயல்திட்டம் இது. கருப்பையக வரிச்சவ்வு மற்றும் சினைப்பை ஆகியவற்றில் வரக்கூடிய மிகப்பொதுவான பெண் பிறப்புறுப்பு சார்ந்த இரு புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே மற்றும் பலனளிக்கும் சிகிச்சையளிக்கக்கூடிய காலகட்டத்திலேயே கண்டறிவதே இந்த முன்னெடுப்பு…

Doctor Vikatan: குழந்தைகளுக்கும் ஓட்ஸ் கஞ்சி கொடுக்கலாமா, எந்த வயதிலிருந்து கொடுக்கலாம்?

குழந்தைகளுக்குத் திட உணவுகளை அறிமுகப்படுத்தும்போது முதலில் எந்த உணவையும் தனியேதான் கொடுத்துப் பழக்க வேண்டும். பிறகுதான் அதை வேறு உணவுகளுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.  அந்த வகையில் ஓட்ஸுடன் பழங்கள் சேர்த்தும் கொடுக்கலாம். உதாரணத்துக்கு, ஓட்ஸுடன் மசித்த வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சேர்த்துக் கொடுக்கலாம்.ஓட்ஸுடன் மசித்த வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சேர்த்துக் கொடுக்கலாம்.freepikகுழந்தைகளுக்கு ஓட்ஸ் கொடுக்கும்போது எப்போதும் பிளெயின் ஓட்ஸாக இருக்கும்படி பார்த்து வாங்கிப் பயன்படுத்த வேண்டும். மசாலா ஓட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்கவும்.ஓட்ஸை முதலில் வெறும் கடாயில் லேசாக வறுத்து, பிறகு…

Doctor Vikatan: `50 வயதில் திடீர் மூச்சுத்திணறல்.. கொரோனா வந்தவர்களுக்கு இப்படி வருமா?’

Doctor Vikatan:  நான் 50 வயதுப் பெண். ஆக்டிவ்வாக இருக்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன் எனக்கு திடீரென மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டது. ஒருவித அசௌகர்யமான உணர்வு ஏற்படவே, ஹார்ட் அட்டாக் அறிகுறி என நினைத்து மருத்துவரிடம் போனேன். இசிஜி எடுத்துப் பார்த்து பிரச்னை இல்லை என்றார். பிறகு மூச்சு சம்பந்தமான பிரச்னையாக இருக்கலாம் என நுரையீரல் மருத்துவரையும் பார்த்தேன். அவரும் பிரச்னை இல்லை என்றார். ஆனால், கொரோனா வந்தவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் வருவதாகவும் சொன்னார். இதை எப்படிப் புரிந்துகொள்வது…?பதில்…

Doctor Vikatan: ஒருநாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம், மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டுமா?

பொதுவாகவே, முட்டையில் மஞ்சள் கருவைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்துவோம். மஞ்சள்கருவில் 5 கிராம் அளவு கொழுப்புச்சத்து உள்ளது. ஏற்கெனவே கொலஸ்ட்ரால் பாதிப்புக்குள்ளானவர்கள், இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள், வயதானவர்கள், சாப்பிடும் கொழுப்பை எரிக்க இயலாதவர்கள் போன்றோருக்கு மஞ்சள் கருவால் கொழுப்பு அதிகமாகவும், ஏற்கெனவே உள்ள உடல்நல பாதிப்புகள் மேலும் தீவிரமடையவும் வாய்ப்புகள் அதிகம். ஒருவரது எடைக்கேற்ப அவரது அன்றாட புரதச்சத்து தேவை நிர்ணயிக்கப்படும். உதாரணத்துக்கு, 60 கிலோ எடையுள்ள ஒரு நபருக்கு 60 கிராம் அளவு புரதச்சத்து தேவை. அந்த 60 கிராம்…

Apollo: எனது உணவு, எனது ஆரோக்கியம்; ‘மை ஃபுட் மை ஹெல்த்’ என்ற நூலை வெளியிட்ட அப்போலோ

“மை ஃபுட் மை ஹெல்த்” (My Food, My Health) என்ற இந்த வெளியீடு, நோய்த் தடுப்பு சுகாதாரத்திலும் நோயாளிகளுக்கு உரிய தகவல்களை தெளிவாக வழங்குவதிலும் அப்போலோ மருத்துவமனையின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க சான்றாக அமைந்துள்ளது. இப்புத்தகம் நீண்டகால நல்வாழ்வில் ஊட்டச்சத்தின் முக்கிய பங்கை எடுத்துரைப்பதால், அனைவரும் கட்டாயம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகங்களில் ஒன்றாக இது இருக்கிறது.அப்போலோ மருத்துவமனை பற்றி:1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத்…

Doctor Vikatan: மருந்துகள் எடுக்கும்போது சிறுநீரின் நிறம் மாறுவது ஏன்?

Doctor Vikatan: ஏதேனும் உடல்நலக் கோளாறுகளுக்காக மருந்து, மாத்திரைகள் எடுக்கும்போது சிறுநீரின் நிறம் மாறுவது ஏன்? இது சாதாரணமானதுதானா அல்லது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி.குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி பொதுவாகவே நம் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில்தான் இருக்க வேண்டும். இதை straw-colour அல்லது pale yellow colour என குறிப்பிடுவதுண்டு. சில மருந்துகளை எடுக்கும்போது அவற்றில் உள்ள கலரிங் ஏஜென்ட்டுகள், நிறமிகளின் காரணமாக,…

Doctor Vikatan: மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போதுஎகிறும் BP; கட்டுப்படுத்த முடியுமா?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு 60 வயதாகிறது. எப்போது எந்தப் பிரச்னைக்காக மருத்துவரைப் பார்க்கப் போனாலும் அவருக்கு BP அளவு தாறுமாறாக அதிகரிக்கிறது. மருத்துவர் BP பார்த்துவிட்டு, குறைத்துவிட்டு வரும்படி திருப்பி அனுப்புகிறார். மற்ற நேரங்களில் அம்மாவுக்கு BP அளவு நார்மலாகவே இருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது, இதற்கு சிகிச்சை தேவையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி. குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தத்தில் ‘எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்’ (Essential…

Vaccine: இந்தியாவில் 14.4 லட்சம் குழந்தைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லையா? -அதிர்ச்சி தரும் ஆய்வு!

2023-ம் ஆண்டு உலகம் முழுவதும் 15.7 கோடி ஜீரோ டோஸ் குழந்தைகள் இருந்திருக்கின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 8 நாடுகளிலேயே உள்ளனர்.அவை, நைஜீரியா, இந்தியா, காங்கோ ஜனநாயக குடியரசு, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், இந்தோனேசியா மற்றும் பிரேசில்.இந்தியாவில் மட்டும் 14.4 லட்சம் குழந்தைகள் ஒரு தடுப்பூசிக்கூட போட்டுக்கொள்ளாமல் உள்ளனர். இதனால் இந்த பட்டியலில் நைஜீரியாவுக்குப் பிறகு இரண்டாம் இடம் பிடிக்கிறது நம் நாடு.கோவிட் 19 தாக்கம்கொரோனா வைரஸ் பரவல் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை வெகுவாக பாதித்தது.…

Apollo: இளம் குழந்தைகள் மீண்டும் வலுவுடன் மீண்டெழ தமிழ்நாட்டின் முதல் குழந்தை எலும்பியல் மருத்துவம்

அவசரகால விபத்து சேவைகளில் குழந்தை நோயாளிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மருத்துவ நெறிமுறைகளும் உள்ளன. எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களைத் தவிர, நிபுணர்கள் குழுவில் மென்மையான திசு தொடர்பான சிக்கலான சிகிச்சைகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், ரத்த ஓட்டம் பிரச்சினைகளுக்கான வாஸ்குலர் நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சையின் போது இளம் நோயாளிகளை நிர்வகிப்பதில் அனுபவம் வாய்ந்த குழந்தை மயக்க மருந்து நிபுணர்கள் என பல்துறை நிபுணர்கள் இடம்பெற்று உள்ளனர்.தமிழ்நாட்டின் முன்னணி குழந்தை மருத்துவ சுகாதார நிறுவனம் என்ற…

1 2 3 207