Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: ஒருவருக்கு அதிகபட்சமாக எத்தனை முறை ஹார்ட் அட்டாக் வரும்? | Doctor vikatan – What is the maximum number of heart attacks a person can have?

மேஜர் அட்டாக் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதயத்தின் தொடக்கத்தில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதையே மேஜர் அட்டாக் என்கிறோம். சிலருக்கு வேறு இடத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்த அறிகுறியே தெரிந்திருக்காது. வேறு ஏதேனும் விஷயத்துக்காக இசிஜி எடுக்கும்போதுதான், அவருக்கு ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்ததே தெரிய வரும். எனவே பிரதான ரத்தக்குழாய்களில் அடைப்பு வரும்போதுதான் அதன் விளைவாக வரும் ஹார்ட் அட்டாக்கை சம்பந்தப்பட்டவர் உணர்வார்.இன்னும் சிலருக்கு நெஞ்சுவலி வந்திருக்கும். ஆனால் அதை…

நாடாளுமன்றத்திற்கு பாடகியை போல உடை, விக் வைத்து வந்த எம்.பி – க்கு குவியும் பாராட்டுகள்!| Australian MP Sussan Ley Dresses Up As Tina Turner in Parliament On a Dare

சூசன் லே நாடாளுமன்றத்தில் பேசுகையில், “இது ஒரு பந்தயத்திற்காகச் செய்யப்பட்டது. இந்தப் பந்தயம் மதிப்பு மிக்க காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்று. கடந்த வெள்ளியன்று புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டும் கூட்டம் கிரிஃப்பித்தில் நடைபெற்றது. என் நண்பரான ரேடியோ தொகுப்பாளர், அந்த நோக்கத்துக்காக 100,000 டாலர் திரட்ட என்னிடம் இந்த டினா டர்னர் காஸ்ட்யூமை சேலன்ஞ் செய்தார். டினாவை நான் நாடாளுமன்றத்திற்கு `அழைத்துச்’ சென்றால், நண்பர்கள் அனைவரும் குறிப்பிட்ட தொகையைத் திரட்ட வேண்டும்இரண்டு வருடங்களுக்கு முன்பு கிரிஃப்பித்தில் புதிய கேன்சர்…

அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் – தினமும் இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணினா போதும்! | Visual Story

ஃபேஸ்வாஷ்காலையில் எழுந்தவுடன் வெறும் தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவவும். இதற்குக் குளிர்ந்த நீரோ, சுடு தண்ணீரோ வேண்டாம். வழக்கமான குழாய்த் தண்ணீரே போதுமானது. இப்படிச் செய்வதால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து நாள் முழுக்க ஃபிரெஷ்ஷாக உணரலாம். உடற்பயிற்சிநன்கு வியர்க்கும்படி உடற்பயிற்சி, யோகா அல்லது நடைப்பயிற்சி செய்யவும். இதனால் உடலில் இருக்கிற கழிவுகள் வியர்வை வழியாக வெளியேறும்.கழுத்து உடற்பயிற்சிஉடலில் கழுத்துப் பகுதியில்தான் சீக்கிரம் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். அதனால், கழுத்துக்கான பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு தினமும் செய்து வந்தால், கழுத்தில் சுருக்கங்கள் வருவது தள்ளிப் போடப்படும்.எலுமிச்சை, தேன்வெந்நீரில் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து குடிக்கும் போது உடலில்…

How to: சருமப் பராமரிப்புக்கு க்ரீன் டீ பயன்படுத்துவது எப்படி? | How to use green tea for skin care?

உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவுப் பொருள்களில் பெரும்பாலும் க்ரீன் டீ இடம் பிடித்திருக்கும். அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், சுறுசுறுப்பாக இயங்க வைக்கவும் என, பலவிதங்களில் உதவும். உடலுக்கு உள்ளே செய்யும் நன்மைகளுடன், வெளிப்புற சருமத்திற்கும் க்ரீன் டீ இலைகள் நல்ல பலனை தர கூடியது. இதனை சரியான முறையில் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குதல், சருமத்தில் பளபளப்பை கொண்டு வருதல்,…

கணவருடன் போட்டி, 70 கிலோ ஜேசிபி டயரை 8 முறை அசால்ட்டாகத் தூக்கிப்போட்ட அஜிலா!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தாமரைகுட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் `இரும்பு மனிதன்’ கண்ணன். இவர் லாரியைக் கட்டி இழுப்பது, இரண்டு பைக்குகளை தூக்கிச் சுமப்பது போன்ற பல சாகசங்களை செய்து வருகிறார். அடுத்ததாக, ரயில் மற்றும் விமானத்தை கட்டி இழுக்கும் லட்சியத்தை மனதில் வைத்துச் செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் பஞ்சாபில் நடந்த ’ஸ்ட்ராங் மேன்’ போட்டியில் கலந்து கொண்டு இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். இவர் ஜிம் பயிற்சியாளராகவும் உள்ளார். அஜிலாவுடன் அவரது கணவர்…

புறா எச்சங்களால் உயர் ரத்தஅழுத்த நிமோனியா அதிகரிப்பு? பறவைகளுக்கு உணவளித்தால் அபராதம் என எச்சரிக்கை | Hypertensive pneumonia due to pigeon droppings on the rise

மனிதர்களை எவ்வாறு பாதிக்கிறது?பொதுவாகப் பார்த்தால், புறாக்களின் செயல்பாடுகள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாதது போல் தோன்றினாலும், உண்மையில் அவை மனிதர்களுக்கு பல நோய்களை உண்டாக்குகின்றன. அவற்றின் உடலில் இருந்து உதிரும் இறகுகள் மூலம், மனிதர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.அடுத்து, புறாவின் எச்சங்களும் நோய்களை ஏற்படுத்தும். எச்சங்கள் மற்றும் இறகுகளில் இருந்து தோன்றும் ஆன்டிஜென், நுரையீரலுக்குள் சென்று நோயெதிர்ப்பு திறனை பாதித்து, நுரையீரலை சேதப்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஒவ்வாமை ஏற்பட்ட சில மணி நேரத்தில் கடுமையான அறிகுறிகள் தோன்றும்.…

Doctor Vikatan – 16 March 2014 – அறிகுறிகளை அறிவோம்! – சர்க்கரை நோய் | Diabetes

நம் உடல் செல்கள் அனைத்தும் இயங்க ஆற்றல் தேவை. நாம் சாப்பிடும் உணவு, குளுகோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. ஒவ்வொரு திசுவுக்கும் இந்த குளுகோஸ் செல்ல வேண்டுமானால், கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் தேவை. இந்த இன்சுலின் போதுமான அளவு சுரக்கவில்லை என்றாலோ, சுரக்கும் இன்சுலின் ஆற்றல் கொண்டதாக இல்லை என்றாலோ… ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இதையே சர்க்கரை நோய் என்கிறோம்.அறிகுறிகளை அறிவோம்! – சர்க்கரை நோய் Source link

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கலாசாரம் கற்பிக்கப்படும்… ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிரடி அறிவிப்பு

ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சம்வர்த்தினி நியாஸ், `கர்ப்ப சன்ஸ்கார்’ என்ற பெயரில் ஒரு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கலாசாரம் மற்றும் பழைமைவாதத்தைக் கற்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி ஜவஹர்லால் தேசிய பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணக்கப்பட்ட நிகழ்வில் இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.ஆர்.எஸ்.எஸ்இந்தப் பிரசாரத்தில், ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்களுடன் இணைந்து செயல்பட உள்ளனர். இவர்கள், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சியுடன், கருவில் இருக்கும் குழந்தைக்கு கீதை, ராமாயணம் பயிற்றுவிப்பார்கள். இந்தத்…

Doctor Vikatan: பித்தப் பையில் கற்கள்… அப்படியே விடுவது ஆபத்தா? | Doctor vikatan – Gallbladder stones…is it dangerous to leave them alone?

பித்தப்பை கற்கள் பாதிக்க பல காரணங்கள் இருக்கலாம். பித்தநீர் சேர்ந்து கற்களாக மாறலாம். உணவுப்பழக்கமும் காரணமாகலாம். சிலர், வாழ்நாள் முழுவதும் பித்தப்பைக் கற்களுடன் இருப்பார்கள். அவர்களுக்கு அந்தக் கற்களின் அளவு சிறியதாக இருந்திருக்கும். அதற்கான அறிகுறியே தெரிந்திருக்காது. பித்தப்பைக் கற்கள் உள்ள எல்லோருக்கும் அறிகுறிகள் வெளிப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. அறிகுறிகளை உணர்வோர் மருத்துவரை அணுகலாம். அல்ட்ரா சவுண்ட் அல்லது சிடி ஸ்கேன் மூலம் கற்களின் அளவு பார்க்கப்பட்டு, அவை பெரிதாக இருந்தால் அறுவைசிகிச்சை செய்யப்படும். மிகச்…

இந்த Plant சாப்பிட்டா Knee & Back Pain சரியாகுமா? – Dr Santhosh Jacob Explains | எலும்பு தேய்மானம் – dr santhosh jacob explains the causes and cure for back pain

Published:08 Mar 2023 12 PMUpdated:08 Mar 2023 12 PMHere in this video Dr Santhosh Jacob explains the major causes for back pain and the remedy to cure back pain and knee pain. he also tells about a plant that has been effective in curing bone and muscle problems. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து,…

1 111 112 113 114 115 211