Apollo: ‘எண்டு-ஓ செக்’-ஐ அறிமுகம் செய்த அப்போலோ!
பெண்களுக்கு புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான செயல்திட்டத்தின் மீது அர்ப்பணிப்புடன் செயல்படும் அப்போலோ கேன்சர் சென்டர் (ACC) மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC) எண்டு-ஓ செக் (End-O Check) என்ற ஒரு செயல்திட்டத்தை நேற்று தொடங்கியிருக்கிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான விரிவான செயல்திட்டம் இது. கருப்பையக வரிச்சவ்வு மற்றும் சினைப்பை ஆகியவற்றில் வரக்கூடிய மிகப்பொதுவான பெண் பிறப்புறுப்பு சார்ந்த இரு புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே மற்றும் பலனளிக்கும் சிகிச்சையளிக்கக்கூடிய காலகட்டத்திலேயே கண்டறிவதே இந்த முன்னெடுப்பு…