ரிஷப் பந்த் காயத்துடன் போராடி அரை சதம் விளாசல்: இந்திய அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழப்பு | Rishabh Pant scores fifty despite injury India all out for 358 runs
மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காலில் ஏற்பட்ட காயத்துடன் போராடிய ரிஷப் பந்த் அரை சதம் அடித்து அணிக்கு பலம் சேர்த்தார். மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58, கே.எல்.ராகுல் 46,…