சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்பு | Chennai Grand Masters Chess Tournament Arjun Erigaisi participate
சென்னை: இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கிளாசிக்கல் செஸ் போட்டியான குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியின் 3-வது சீசன் வரும் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. இம்முறை போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பரிசுத் தொகையும் ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாஸ்டர்ஸ் பிரிவில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, நிஹால் சரின், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் ஃபாரெஸ்ட், அமெரிக்காவின் லியாங் அவோன்டர், ஜெர்மனி…