குளிர் காலத்தில் குழந்தைகள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத உணவுகள்! | Foods that children should and should not eat during winter!
கீரைகள் நல்லதுதான். ஆனால், குளிர்காலங்களில் மட்டுமல்ல, எல்லா சீசனிலும் பகலில் மட்டும்தான் கீரைகளை சாப்பிட வேண்டும். பேக் செய்து வருகிற ஊட்டச்சத்து பானங்களும் நெஞ்சில் கபத்தை ஏற்படுத்தும் என்பதால், அவற்றையும் இந்த ஜில் சீசனில் தவிர்த்து விடுங்கள். அதற்குப்பதில், சத்துமாவுடன் வெல்லம், சிறிதளவு சுக்குப்பொடி சேர்த்து கஞ்சியாக காய்ச்சிக் கொடுங்கள். இரவில் மோர் மற்றும் கீரைப் போலவே, தயிரையும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. ‘இரவில் தயிர் சாப்பிட்டு என் பிள்ளைக்கு பழக்கம்’ என்பவர்கள், உங்களுக்கே தெரியாமல் குழந்தைகளுக்கு செரிமானக்…