ரஞ்சி கிரிக்கெட் போட்டி: இஷான் கிஷன் அபார சதம் | Ishan Kishan hits century in Ranji Trophy opener,
கோவை: தமிழக அணிக்கெதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் எலைட் பிரிவு ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் எலைட் பிரிவு ஆட்டங்கள் நேற்று நாடு முழுவதும் தொடங்கின. தமிழ்நாடு, ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோவை ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. டாஸில் ஜார்க்கண்ட் அணி வென்று முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்கார்களாக ஷிகர் மோகன், சரண்தீப் சிங் ஆகியோர் களமிறங்கினர்.…









