உலக ஜூனியர் பாட்மிண்டன்: தன்விக்கு வெள்ளிப் பதக்கம் | world junior badminton tanvi sharma won silver
குவாஹாட்டி: உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை தன்வி சர்மா வெள்ளிப் பதக்கம் வென்றார். அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்தன. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தன்வி சர்மா, தாய்லாந்து வீராங்கனை அன்யாபாட் பிச்சிட்பிரீச்சாஸக் ஆகியோர் விளையாடினர். இதில் தன்வி சர்மா 7-15, 12-15 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீராங்கனை அன்யாபாட் பிச்சிட்பிரீச்சாஸக்கிடம் தோல்வி கண்டு 2-வது இடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.…









