விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 23 பேர் பலி, 6 பேர் காயம்! |virudhunagar fire cracker accident 23 dies 6 admits to hospital
விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் அங்கு பதற்றநிலை நிலவுகிறது. விருதுநகர் மாவட்டம், வாச்சக்காரப்பட்டி அருகிலுள்ள கட்டனார்பட்டி பகுதியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான “வனஜா” என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.மாவட்ட நிர்வாக அனுமதியுடன் இயங்கி வந்த இந்த பட்டாசு ஆலையில் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.வழக்கம்போல் இன்று…









