மாரடைப்பு ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி? | Visual Story
இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடுவதையே நாம் மாரடைப்பு என்கிறோம். மோசமான உணவுப்பழக்கம் மற்றும் முறையற்ற வாழ்வியலே மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கியக்காரணம். தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உடலில் தேங்குவது மிகவும் ஆபத்தானது என்பதால் ஜங்க் ஃபுட் மற்றும் துரித உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவை சாப்பிடலாம்.உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் கொழுப்புகள் கரைவதோடு, இரத்த ஓட்டமும் சீராக இருக்கும் என்பதால் மாரடைப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியும். உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு தூக்கம் அத்தியாவசியமானது என்பதால்…









