கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்று நீரில் மூழ்கி சிறுமி உட்பட 7 பெண்கள் பலி
5 ஜூன் 2022, 10:22 GMTபுதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர்கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்த 6 இளம் பெண்கள், ஒரு சிறுமி ஆகிய அனைவருமே உறவினர்கள். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் அருகேயுள்ள குச்சிப்பாளையத்தில் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் இவர்கள் குளித்தார்கள். அப்போது இவர்கள் அனைவருமே நீரின் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்டு நினைவிழந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்…







