மது உடலுக்குள் என்ன செய்கிறது? | What does alcohol do to the body?
மது அருந்திய பிறகு குடலில் இருந்து கல்லீரலுக்கு ரத்தம் மூலம் வருகிறது. ஒருவருடைய போதையின் அளவு அவருடைய ரத்தத்தில் கலந்து உள்ள ஆல்கஹால் அளவைப் பொறுத்தது. இதனால்தான் (BAC-blood alcohol concentration) என்று போதையின் அளவை ரத்தத்தின் மூலம் கணிக்கிறோம். நேரம் செல்லச் செல்ல, கல்லீரலில் ஆல்கஹால் வளர் சிதை மாற்றம் நடந்த பிறகு இது மெல்ல மெல்ல குறையத் தொடங்கும். அப்படியே போதையின் அளவும் இறங்கி வரும். ஒரே வயது, உடல் நிலை கொண்ட ஆண்கள்…