“கட்டியது கலைஞர்; சுண்ணாம்பு அடித்து திறந்து வைத்ததுதான் நீங்கள்!” – சட்டசபையில் மா.சுப்பிரமணியன் | Minister Subramanian criticized Edappadi Palanisamy in the assembly
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், “அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் டவர் 1,2,3 ஆகிய கட்டடங்கள் கட்டப்பட்டன. அதில் அதிநவீன சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. அ.தி.மு.க நிர்வாகிகள் தீ விபத்து சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் சம்பவ இடத்துக்குச் சென்று மக்களுக்கு உதவி செய்தனர்” என்றார்.எடப்பாடி பழனிசாமிஇந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்…