நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சைக்கு ஒரு மாற்று வழிமுறையாக இது இருக்கக்கூடும். கதிர்வீச்சின் மூலம் முன்பு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையிலும், பிற பகுதிகளுக்கு பரவுகின்ற புற்று நைவுப் புண்கள் அல்லது திரும்பத் திரும்ப வரும் புற்றுநோயுள்ள நோயாளிகள் கூட இச்சிகிச்சையைப் பெறலாம்.
கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். மகாதேவ் போத்தராஜு ‘‘சைபர்நைஃப்®’’ சிகிச்சை குறித்து விளக்குகையில், ‘‘சைபர்நைஃப்® S7™ FIM சிகிச்சைகள், இந்த சிகிச்சைக்கான காலஅளவு பொதுவாக 30 முதல் 90 நிமிடங்கள் வரை இருக்கலாம். இந்நேரத்தில் பல்வேறு கோணங்களிலிருந்து 100 முதல் 200 கதிர்வீச்சு கற்றைகள் செலுத்தப்படுகின்றன. ஒவ்வொரு கற்றையும் ஏறக்குறைய 10 முதல் 15 விநாடிகள் வரை நீடிக்கும். இந்த சிகிச்சை அமர்வுகள் உடலில் ஊடுருவல் அல்லாத வெளிநோயாளிக்கான செயல்முறைகளாக மேற்கொள்ளப்படுகின்றன. உணர்விழப்பு மருந்தோ அல்லது உடலில் கீறல்களோடு இதற்கு தேவைப்படாது. இதனால் இந்த சிகிச்சை நடைபெறும் காலகட்டத்தில் பெரும்பாலான நோயாளிகளால் அவர்களது தினசரி செயல்பாடுகளை வழக்கம்போல தொடர்ந்து மேற்கொள்ள இயலும்’’ என்று கூறினார்.
கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் சங்கர் வங்கிபுரம் பேசுகையில், ‘‘சைபர்நைஃப்® S7™ FIM, வேகத்தையும், துல்லியத்தையும் ஒருங்கிணைத்து கதிர்வீச்சு சிகிச்சை எதிர்காலத்தையே மறுவரையறை செய்கிறது. தீங்கற்ற மூளைக்கட்டிகள், மூளையில் பரவியுள்ள புற்றுக்கட்டிகள் உட்பட பல்வேறு நோய்ப்பாதிப்பு நிலைகளுக்கு மிகத்துல்லியமான SRS/SBRT சிகிச்சைகளை வழங்குவதற்கு செயற்கை நுண்ணறிவால் நிகழ்நேரத்தில் இலக்கை சரியாக கண்டறியும் திறன்மிக்க சிகிச்சை முறையாக இது இருக்கிறது. உட்கை நரம்பு வாதங்கள், பொத்து தலைவலிகள், உடல் நடுக்கங்கள், மூளை நைவுப்புண்ணால் ஏற்படும் கால்கை வலிப்பு மற்றும் மண்டை ஓட்டில் அறுவைசிகிச்சையால் சரி செய்ய இயலாத சில நேர்வுகள் (மருத்துவ அல்லது தொழில்நுட்ப காரணங்களினால்), நுரையீரல், கணையம், கல்லீரல், புராஸ்டேட் ஆகிய உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களுக்கும், தலை மற்றும் கழுத்தில் திரும்பத்திரும்ப வரும் புற்றுநோய்களுக்கும் சைபர்நைஃப் சிகிச்சையை பயனளிக்கும் வகையில் வழங்க முடியும்’’ என்று கூறினார்.