பாஜ கூட்டணியில் இருந்து விலகல் இபிஎஸ் தான் முடிவை எடுத்தார்: புகழேந்தி குற்றச்சாட்டு

Share

சென்னை: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மூலம், பாஜ கூட்டணியில் இருந்து விலகும் முடிவை மேற்கொண்டவர் இபிஎஸ் தான் என்று அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளர் புகழேந்தி கூறியதாவது: பிஜேபியோடு கூட்டணி முடிந்து விட்டது, ஒட்டுமொத்தமாக விலகி விட்டோம் என்பதை தான் சி.வி.சண்முகத்தின் பேச்சின் மூலமாக எடப்பாடி பழனிசாமி உணர்த்தியிருக்கிறார். அது ஒட்டுமொத்தமாக இபிஎஸ்சின் முடிவு என்பதை தெளிவாகி விட்டது. நான்கு வருடங்கள் ஆட்சியில் இருக்கும் போது பாஜவோடு கூட்டணி தேவைப்பட்டது, இப்போது ஆட்சியில் இல்லை என்றதும் தேவைப்படவில்லை. அன்று அதிமுகவில் ஒற்றுமை தேவைப்பட்டது இப்போது திடீர் கோபம் ஏன் என்பதை இபிஎஸ் தெளிவுப்படுத்த வேண்டும்.

குஜராத்தில் என்ன நடந்தது என்பதை பாஜ தலைவர் அண்ணாமலை  நடுநிலையோடு சொல்ல வேண்டும். அங்கு ஓபிஎஸ் எங்கே என்று பிரதமர் தேடினார். அதை ஏ.சி.சண்முகம் போன்றவர்கள் அறிந்தார்கள். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கும் அது தெரியும். ஓ.பன்னீர்செல்வத்தை  தேடி கண்டுபிடித்து பதவியேற்பு விழா மேடையில் அமர வைத்து அழகுப்பார்த்தார் பிரதமர் மோடி. பாஜ, ஓபிஎஸ்சை மரியாதையோடு நடத்துகிறது. அன்போடு நடத்துகிறது என்பதை அண்ணாமலை புரிந்துகொள்ள வேண்டும். துரோகிகளோடு கூட்டணி இல்லை, ஊழல் வாதிகளோடு கூட்டணி இல்லை என்பது தான் பாஜகவின்  முடிவு. அண்ணாமலை நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com