இந்த ஒரே ஆட்டத்தில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார், மெஸ்ஸி.!
1. மெஸ்ஸி இதுவரை உலக கோப்பையில் 17 வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். ஜெர்மனியின் ஜாம்பவான் மிரோஸ்லாவ் க்ளோஸ் 17 உலகக் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இவர் சாதனையை சமன் செய்துள்ளார், மெஸ்ஸி.
2. நேற்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது பெற்றார், மெஸ்ஸி. இந்த 2022 உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 5 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இதற்கு முன் எந்த ஒரு வீரரும் ஒரே உலகக் கோப்பையில் ஐந்து ஆட்டநாயகன் விருதுகளை வென்றதில்லை.
3. மெஸ்ஸி, இதுவரை 26 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் மூலம் ஜெர்மனியின் லோதர் மத்தாஸ் (25 ஆட்டங்கள்) சாதனையை முறியடித்து, உலகக் கோப்பையில் அதிக முறை விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
4. இத்தாலியின் ஜாம்பவான் பாலோ மால்டினி உலகக் கோப்பை வரலாற்றில் அதிக நிமிடங்கள் (2,217- நிமிடங்கள்) விளையாடிய வீரர் ஆவார். மெஸ்ஸி, இந்த சாதனையை முறியடித்து உலகக் கோப்பை வரலாற்றில் அதிக நிமிடங்கள் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.