“நடுவர் டேனியல் ஒர்சாடோ மிகவும் மோசமானவர்!”- குரோஷிய வீரர் லூகா மாட்ரிச் குற்றச்சாட்டு | Luka Modric Slams Referee After World Cup Semi-Final Loss To Argentina

Share

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றில் குரேஷியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி  அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

இதனிடையே அர்ஜெண்டினாவின் முதல் கோலுக்குக் காரணம் இத்தாலிய நடுவர் டேனியல் ஒர்சாடோ வழங்கிய தவறான பெனால்டி தீர்ப்புதான் என்று கூறி வரும் நிலையில், குரோஷிய அணியின் கேப்டன் லூகா மாட்ரிச் அந்த நடுவர் குறித்து விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

இத்தாலிய நடுவர் டேனியல் ஒர்சாடோ குறித்துப் பேசிய லூகா மாட்ரிச், “என்னைப் பொறுத்தவரை இது பெனால்டியே கிடையாது. பொதுவாக நடுவர்களைப் பற்றி நான் பேச மாட்டேன்.

லூகா மாட்ரிச்

லூகா மாட்ரிச்

ஆனால், இன்று என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் மிகவும் மோசமானவர் என்பதை நான் அறிவேன். இந்த ஆட்டத்தில் மட்டுமல்ல, இதுபோன்ற சம்பவங்களைப் பலமுறை அவரிடம் நான் சந்தித்துள்ளேன். அவருடன் எனக்கு எப்போதும் ஒரு நல்ல அனுபவமே ஏற்பட்டதில்லை. மிகவும் மோசமானவர் அவர். இருப்பினும் அர்ஜெண்டினாவுக்கு வாழ்த்துக்கள், ஆனால் முதல் பெனால்டியால் நாங்கள் ஏமாற்றம் அடைந்தது உண்மை. அதை மறுக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com