காலையில் தூங்கி எழுந்ததும் பல் துலக்காவிட்டால் வாயிலிருந்து துர்நாற்றம் வருவதைப் போல, வெஜைனா பகுதியில் ஏதேனும் இன்ஃபெக்ஷன் இருந்தால்தான் அதன் வாடையை நம்மால் உணர முடியும்.
இன்று பல இளம் பெண்களும் இந்த வாடையைப் போக்க வெஜைனா பகுதியில் பெர்ஃபியூம், வெஜைனல் வாஷ் போன்றவற்றை உபயோகிக்கிறார்கள். இது சரியான விஷயமல்ல. வெஜைனா பகுதியில் நல்ல பாக்டீரியா நிறைய இருக்கும். வாசனையான பொருள்களை அந்தப் பகுதியில் உபயோகிக்கும்போது அந்த பாக்டீரியா அழிந்துவிடும். அதனால் அந்தப் பகுதியில் எளிதில் கிருமித் தொற்று பாதிக்கும்.
மீன் போன்ற வாடை, அழுகிய அசைவ வாடை இரண்டும் பாக்டீரியா தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம். இதனுடன் மஞ்சள்நிற கசிவும் இருக்கலாம். இதை ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுத்து குணப்படுத்தலாம்.
சில பெண்கள் மாதவிலக்கின்போது வெஜைனாவுக்குள் வைத்துக்கொள்ளும் டாம்பூன்கள் உபயோகிப்பார்கள். அதை வைத்ததையே மறந்துவிடுவார்கள். அது மட்டுமல்ல, சாதாரண நாப்கினையே குறிப்பிட்ட நேரம் தாண்டியும் மாற்றாமல் வைத்திருந்தால் வாடை வீசும். எனவே, அந்தரங்க உறுப்பு சுகாதாரம் என்பது மிக முக்கியம்.
இந்த விஷயங்களை உங்கள் தோழிக்கு எடுத்துச் சொல்லுங்கள். அதிக அளவில் அந்தரங்க உறுப்பு வாடை வருவதாக அவர் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறச் சொல்லுங்கள். அதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.