இந்திய சுதந்திர போராட்ட வரலாறு: 18 வயதில் தூக்கிலிடப்பட்ட குதிராம் போஸ்

Share

குதிராம் போஸ்

பட மூலாதாரம், NIYOGI BOOKS

படக்குறிப்பு,

குதிராம் போஸ்

1905 ஜூலை 19 ஆம் தேதி வங்காளத்தைப் பிரிக்க கர்சன் பிரபு முடிவு செய்தவுடன், வங்காளத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கோபமடைந்தனர். எல்லா இடங்களிலும் போராட்டங்கள், வெளிநாட்டு பொருட்களை புறக்கணித்தல் மற்றும் செய்தித்தாள்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கட்டுரைகள் என்று ஒரு வகையான எதிர்ப்பு அலை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் சுவாமி விவேகானந்தரின் சகோதரர் பூபேந்திரநாத் தத், ‘ஜுகாந்தர்’ நாளிதழில் எழுதிய கட்டுரையை, தேச துரோகமாக அரசு கருதியது.

கல்கத்தா பிரசிடென்சியின் மாஜிஸ்ட்ரேட் டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்ட், அச்சகத்தைக் கைப்பற்ற உத்தரவிட்டது மட்டுமல்லாமல், இந்தக் கட்டுரையை எழுதியதற்காக பூபேந்திரநாத் தத்துக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்தார். இந்த முடிவு ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சி நெருப்பில் நெய்யை ஊறியது.

இது மட்டுமின்றி, வந்தே மாதரம் முழக்கத்தை எழுப்பிய 15 வயது மாணவருக்கு 15 பிரம்படிகள் என்ற கடுமையான தண்டனையை கிங்ஸ்ஃபோர்ட் வழங்கினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com