`இனி இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள்!’- பி.சி.சி.ஐ-யின் புதிய திட்டம் பலனளிக்குமா? | BCCI to embrace split captaincy strategy

Share

தற்போது புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய பி.சி.சி.ஐ அழைப்பு விடுத்துள்ளது. தேர்வுக் குழு உறுப்பினராக வர விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் ஏழு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்ச பத்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும், அல்லது 30 முதல் தரப் போட்டிகள் விளையாடி இருக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ தெரிவித்திருக்கிறது.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

இதனைத் தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு என இருவேறு அணிகளைக் கட்டமைக்கும் முயற்சியில் பி.சி.சி.ஐ இறங்கவிருப்பதாகத் தெரிகிறது. இதனால் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு என்று ஒரு கேப்டனும், டி20 போட்டிகளுக்கு ஒரு கேப்டனும் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், டி20 போட்டிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com