`Hand of God’ Diego Maradona: 20-ம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கோல் – மாவீரன் கடவுளான கதை! | Hand of God – The story of Argentina football legend Diego Maradona

Share

கோல் கீப்பர் ஷில்டன் மரடோனாவின் லாங் ட்ரிப்பிளை கவனித்து சரியான பாதையில் பாயத் தயாராக இருந்தார். அவரையும் சிறிய ட்ரிப்பிள் மூவ்மெண்ட்டிலேயே குழப்பி அட்டகாசமாக கோலாக்கியிருந்தார். போட்டி நடந்த அந்த எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் ரசிகர்கள் யாருமே இல்லை. எதிரணியும் யாரும் இல்லை. ஏன் சக வீரர்கள் கூட இல்லை. அங்கே அந்த கோல் நிகழ்ந்த தருணத்தில் அந்த உலகத்தில் ஆள் அரவமற்ற ஒரு மைதானமும் ஒரு கால்பந்தும் கூடவே மரடோனாவும் மட்டுமே இருந்தனர். மரடோனா இப்படி ஒரு உலகத்தை கற்பனை செய்துகொண்டுதான் அந்த கோலை அத்தனை சுலபமாக அடித்திருப்பாரோ எனப் பல சமயங்களில் தோன்றும்.

மரடோவின் ஜெர்ஸிக்கு விலையை நிர்ணயம் செய்துவிட முடியும். ஆனால், அவரால் நிகழ்ந்த அந்த வரலாற்றுத் தருணம் விலைமதிப்பே அற்றது.

தொடரின் இறுதிவரை சிறப்பாக விளையாடிய அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனி அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்று சாம்பியனானது. இந்தத் தொடரில் மரடோனா 5 கோல்களையும் 5 அசிஸ்ட்களையும் செய்திருந்தார். எல்லாமே வரலாறுதான். ஆயினும், அந்த Hand of God-ம் Goal of the Century-ம் மட்டும் எப்போதுமே கொஞ்சம் கூடுதல் ஸ்பெசல்தான்!

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com