மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்தவர் சில மாதங்களுக்கு முன் பிரேசிலில் நடைபெற்ற 24-வது செவித்திறன் குறைந்தவர்களுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று அதில் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் வீரரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
தொடர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவில் அபினவ் சர்மாவுடன் இணைந்து மலேசியாவின் பூன் – டியோ ஜோடியை வீழ்த்தி பதக்கம் வென்றார்.
குழு பேட்மிட்டன் போட்டியிலும் வென்று மொத்தமாக மூன்று தங்கப்பதக்கங்களை நாட்டிற்காக பெற்றுத் தந்தார். இந்த நிலையில்தான் ஜெர்லின் அனிகா தற்போது அர்ஜுனா விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.