T20 WC | சுழலில் சுருண்ட ஜிம்பாப்வே; சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள் – அரையிறுதியில் இந்தியா

Share

மெல்போர்ன்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி அணிக்கு ரோஹித் சர்மா – கே.எல்.ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. 3 ஓவர் வரை 18 ரன்கள் சேர்ந்த இந்த இணையை முசரபானி பிரிக்க ரோஹித் சர்மா 15 ரன்களில் வெளியேறினார். அடுத்து களத்துக்கு வந்த விராட் கோலி – கே.எல்.ராகுலுடன் கைகோத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கே.எல்.ராகுல் அதிரடி காட்டிக்கொண்டிருந்தபோது, 12-வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி 26 ரன்களுடன் களத்திலிருந்து நடையைக்கட்டினார் கோலி.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com