சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 71வது பிறந்த நாள் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, அகில இந்திய காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ராஜேஷ் லிலோதியா, தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து, முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, தமிழக சிறுபான்மை ஆணயை தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விஜய் வசந்த் எம்பி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, அசன் மவுலானா எம்எல்ஏ, முன்னாள் எம்பி ஆருண், துணை தலைவர்கள் பொன். கிருஷ்ணமூர்த்தி, கீழானூர் ராஜேந்திரன், தாமோதரன், பொது செயலாளர் ரங்கபாஷ்யம், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், எம்.பி.ரஞ்சன்குமார், அளவூர் நாகராஜன், முத்தழகன், டில்லிபாபு, முன்னாள் மாவட்ட தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆர்டிஐ பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, மாவட்ட துணை தலைவர் எம்.வெங்கடேசன், மயிலை அசோக்குமார், எஸ்.கே.நவாஸ், திருவான்மியூர் மனோகரன், எம்.ஆர்.ஏழுமலை, சூளை ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘காங்கிரசும் மதச்சார்பின்மையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
அப்போது கே.எஸ்.அழகிரி பேசியதாவது: காங்கிரஸ் தான் இந்து மதத்தை துாக்கிப்பிடித்த அரசியல் கட்சி. காங்கிரசாருக்கு நான் சொல்வது, நாம் இந்துக்களுக்கோ, கடவுளுக்கு எதிரானவர்களோ அல்ல. நாம் தான் உண்மையான பிரதிநிதிகள். இவ்வாறு அவர் பேசினார்.