சளிக்கு மாத்திரை சாப்பிட்டால் இறக்கும் அபாயம் ஏற்படுமா என்ற கேள்விக்கு சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் கூறியதாவது…
“சளி பாதிப்பு மோசமாக இருந்து, அவர்கள் மாத்திரையை தாமதமாகக் கொடுத்திருக்க வாய்ப்பு உள்ளது. கிருமிகளின் தாக்கம் மோசமானதன் காரணமாகவும் சிறுவன் இறந்திருக்கலாம். இதயம் மற்றும் நுரையீரலில் திடீரென பிரச்னை ஏற்பட்டு மரணம் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாக, மருந்து அலர்ஜியினால் அனாபிலாக்டிக் ஷாக் (anaphylactic shock) ஏற்படும். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இறப்பு இதனால்தான் ஏற்பட்டிருக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது. இந்த மாதிரியான இறப்புகளுக்குக் கட்டாயம் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். அதில்தான் உண்மை காரணத்தை அறிய முடியும். அதற்குள் நாம் மருத்துவர்களையோ, மருந்தையோ, மருந்துக் கடைகளையோ தேவையில்லாமல் குறை சொல்லக்கூடாது.