இரானிய ட்ரோன்கள்: கியவ் மீது ரஷ்யா நடத்திய நேரடி தாக்குதல் – ‘காமிகேஸ்’ எத்தனை ஆபத்தானது?

Share

  • கியவில் இருந்து பால் அடம்ஸ், லண்டனிலிருந்து மெர்லின் தாமஸ்
  • பிபிசி நியூஸ்

ரஷ்ய ட்ரோன்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

ஷாஹித் – 136 சிதறிய பாகம்

யுக்ரேன் தலைநகரான கியவ் பகுதியில், இரானில் தயாரிக்கப்படும் ‘காமிகேஸ்’ (kamikaze) ட்ரோன்களை கொண்டு குண்டு மழை பொழிந்திருக்கிறது ரஷ்யா.

யுக்ரேனின் மூன்று பகுதிகளில் நடந்த தாக்குதல்களில், நூற்றுகணக்கான கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் டென்ஸ் ஷ்மைகல் தெரிவித்தார். இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக யுக்ரேன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கியவ், சுமியில் தலா நான்கு பேர் என மொத்தம் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் விநியோகிக்கும் பணியை நிறுத்த மறுக்கும் இரான் மீதான தடைகளை தீவிரப்படுத்தும்படி குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

ஒரு வாரத்துக்கு முன்பு, யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், 19 பேர் உயிரிழந்தனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com