இத்தகைய பூச்சிகள் இறக்குமதி செய்யப்பட்டாலும் அல்லது உள்நாட்டிலேயே வளர்க்கப்பட்டாலும் இவை உணவு பாதுகாப்பு தேவைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்படும்.
பட்டுப்புழுவானது பாரம்பர்யமாக தென் கொரியா மற்றும் தாய்லாந்தில் உண்ணப்பட்டு வருகிறது. அதோடு பூச்சிகளை உண்ணும் நாடுகளான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் கொரியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து பூச்சிகளை உண்பது தொடர்பான நடைமுறைகளைப் பெற்றதோடு, இது குறித்த முழுமையான அறிவியல் மதிப்பாய்வையும் சிங்கப்பூர் உணவுத்துறை நடத்தி உள்ளது.