இந்நிலையில், தன்னிடம் இருந்த கடைசி பணத்தில் ஆன்லைனில் மளிகை பொருள்களை விநியோகம் செய்யும் சைன்ஸ்பரியில் (sainsbury), அவர் சில பொருள்களை ஆர்டர் செய்துள்ளார்.
டெலிவரி செய்ய வந்த ஏஜென்ட், வில்லியம் வில்போர்ட்டை பார்த்ததும் ஆச்சர்யப்பட்டார். பார்ப்பதற்குச் சிறுவன் போல உள்ளதாகக் கூறி, ஆர்டர் செய்த பொருள்களை அவருக்குத் தர மறுத்துள்ளார்; பின்னர், அடையாள அட்டையைக் காண்பிக்கும்படி அறிவுறுத்தி உள்ளார். அதற்கு, வயது வரம்புக்குட்பட்ட பொருள்கள் எதையும் நான் வாங்கவில்லையே.. நான் ஏன் என்னுடைய வயது குறித்த ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று வில்லியம் கேள்வி எழுப்பி உள்ளார்.
எனினும் அந்த ஏஜென்ட் பொருளை டெலிவரி செய்ய மறுத்துள்ளார். இது நிறுவனத்தின் பாலிசி, எனவே உங்களது ஐ.டி – யை காட்டுங்கள் என மீண்டும் கேட்டுள்ளார். தன்னுடைய பிறப்புச் சான்றிதழைப் பரிசீலிக்கும்படி கேட்டுக் கொண்டதோடு, தனது உடல்நிலை குறித்து வில்லியம் விவரித்தும், ஆர்டரை மாற்றும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. `எப்படியானலும் உங்களுக்குப் பணம் திரும்பக் கொடுக்கப்படும், அதன்பிறகு வேண்டுமானால் வேறு கடைகளில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்’ என ஏஜென்ட் தெரிவித்துள்ளார்.
வில்லியம் ஆர்டர் செய்த பொருள்களில் எந்தவித போதை பொருள்களும், சிகரெட்டும் இல்லை. இருந்த போதிலும் அவருக்கு ஆர்டர் மறுக்கப்பட்டுள்ளது. அதோடு சூப்பர் மார்க்கெட் நிறுவனம் அவருக்கு அனுப்பிய மெயிலில், பணத்தைத் திரும்பத் தர மூன்று முதல் ஐந்து நாள்கள் வரை ஆகும் எனக் கூறியுள்ளது. பணம் கிடைக்கும்வரை பசியோடு இருப்பதுதான் ஒரே வழியா என வில்லியம் தன்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்தச் சம்பவம் பலரின் கவனத்தைப் பெற்ற பிறகு, அந்நிறுவனம் வில்லியமிடம் மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்பதாகவும் நிறுவனம் கூறி உள்ளது.