என் இடத்துக்கு வேட்டு வைச்சுருவார் போல… தினேஷ் கார்த்தி அதிரடியை வியந்து பாராட்டிய சூர்யகுமார் யாதவ்

Share

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதால் கடைசி டி20 போட்டி சம்பரதயமாக அமைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 227 ரன்களை எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி வீரர் ரிலீ ரோசோவ் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் சதம் அடித்தார்.

இந்திய அணி 227 ரன்களை சேஸிங் செய்யும் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால் இந்திய அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. தினேஷ் கார்த்தி மட்டும் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 46 ரன்களை குவித்தார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி கடைசி டி20 போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது.

Also Read : ஒரு ஃபிளைட்டால் உலகக்கோப்பை மிஸ் செய்த ஷிம்ரன் ஹெட்மயர்

இந்த போட்டிக்கு பின் பேசிய சூர்யகுமார் யாதவ், “தினேஷ் கார்த்தி அதிரடியை காட்ட கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. அவரது அதிரடியை பார்த்த பின் என்னுடைய 4-வது இடத்திற்கு ஆபத்து வந்து விடுமா என்ற எண்ணம் ஏற்படுகிறது. நான் அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை என்றாலும் அந்த நாள் தொலைவில் இல்லை என தோன்றுகிறது“ என்று விளையாட்டாக தெரிவித்தார். மேலும் நான் அவருடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைக்க நினைத்தேன். ஆனால் அது இன்று நடக்கவில்லை என்றார்.

சூர்யகுமார் யாதவ் 6 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் அதிரடியை ரசிகர்கள் மிஸ் செய்த நிலையில் அதை தினேஷ் கார்த்தி அற்புதமாக வெளிப்படுத்தினார். டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் தொடர் நாளை (அக்டோபர் 6) லக்னோ மைதானத்தில் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பை காரணமாக இந்திய அணியில் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தவான் தலைமையில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள உள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com