போட்டியின் விதிமுறைகள்
தனிநபர் ஒருவர் 30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் அவருக்கு ஹோட்டல் சார்பாக 100 ரூபாய் பரிசளிக்கப்படும். முடியாதவர்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கான பணத்தைக் கொடுத்துவிட வேண்டும். அடுத்தது ஒரு டேபிளில் நான்கு பேர் அமர வேண்டியது. அதில் யார் 30 நிமிடங்களில் அதிக பரோட்டா சாப்பிடுகிறார்களோ அவரை வெற்றியாளராக அறிவித்து அவருக்கு உணவகம் சார்பாக 100 ரூபாய் பரிசு வழங்கப்படும்.
அடுத்து 4 பேர் கொண்ட டேபிளில் உள்ள ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 3 பரோட்டா சாப்பிடவேண்டும். முழுமையாகச் சாப்பிடும் பரோட்டா மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 30 நிமிடங்களில் ஒரே டேபிளில் அமர்ந்துள்ள நால்வரில் யார் அதிக எண்ணிக்கையில் பரோட்டா சாப்பிடுகிறார்களோ அவரே அந்த டேபிளின் வெற்றியாளர்.