tasty snacks by using dates replacement of sugar in sweets

Share

சர்க்கரை எதுவும் சேர்க்காமல் பேரிச்சம்பழத்தைப் பயன்படுத்தி லட்டு, பர்ஃபி போன்ற ஆரோக்கிய ஸ்நாக்ஸ் வகைகளை எளிய முறையில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்..

பேரிச்சம்பழமா? அய்யோ வேண்டாம் என்று சொல்வதைத் தான் அதிகளவில் கேட்டிருப்போம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்துகள் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தாலும் ஏதோ பேரிச்சம்பழம் மட்டும் பலருக்குப் பிடிக்கவில்லை. வழக்கமாக இதனை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்து, மூட்டுவலி மற்றும் அல்சைமர் போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பது முதல் தசைகளை வளப்படுத்த, தோல் மற்றம் முடியைப் பளபளப்பாக மாற்றுவதற்கு, செரிமான பிரச்சனைக்குத் தீர்வு காண்பது என பல உடல் நலப்பிரச்சனைகளுக்குத் தீர்வாக உள்ளது.

இது போன்று பல்வேறு நன்மைகள் உள்ள நிலையில், அப்படியே பேரிச்சம்பழத்தைச் சாப்பிடிக்காதவர்கள், சர்க்கரைக்குப்பதிலாக பேரிச்சம்பழத்தைப் பயன்படுத்தி சில ரெசிபிகளை செய்யலாம். பொதுவாக சர்க்கரைப் பயன்படுத்துவது பல உடல் நலப்பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் எவ்வித அச்சமும் இன்றி பேரிச்சம்பழத்தைப் பயன்படுத்தி சில ஊட்டச்சத்துள்ள ரெசிபிகள் செய்யலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதோ அதன் விபரங்கள்.

Read More : வீட்டிலேயே ரோட்டுக்கடை காளான் செய்ய தெரியுமா..? டிரை பண்ணி பாருங்க… ரெசிபி இதோ…

பேரிச்சம்பழ லட்டு:

தேவையான பொருள்கள்:

பேரிச்சம்பழம் – 10

சுத்தமான நெய் – 1 கப்

நட்ஸ், பாப்பி விதைகள் – தேவையான அளவு

பால் – 1 கப்

செய்முறை:

முதலில் பேரிச்சம்பழம் மற்றும் பாலை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் நெய்யை நன்றாக சூடாக்கி, அரைத்த பேரிச்சம்பழ பேஸ்ட்டைச் சேர்த்து மிதமான தீயில் கிளற வேண்டும். மற்றொரு கடாயில் உலர்ந்த பழங்கள், கசகசா மற்றும் தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து பச்சைத் தன்மை வெளியேறும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனையடுத்து மற்றொரு கடாயில் வைக்கப்பட்டுள்ள பேரிச்சம்பழ கலவை நல்ல பதத்திற்கு வந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு அதனுடன் உலர்ந்த பழங்கள் மற்றும் தேங்காய் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். இறுதியில் உங்களுக்கு எந்த சைஸ் தேவையா? அதற்கேற்றால் போல் லட்டு பிடித்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்தால் பல நாள்கள் வரை உபயோகிக்கலாம்.

தேங்காய் பேரிச்சம்பழ பர்ஃபி:

தேவையான பொருள்கள்:

பேரிச்சம்பழம் – 10

பால் – 1/2 லிட்டர்

நெய் – 3 ஸ்பூன்

பால் பவுடர் – 3/4 கப்

தேங்காய் துருவல் – 1/2 கப்

பிஸ்தா – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பேரீச்சம்பழம் மற்றும் பாலை எடுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் நெய்யை நன்றாக சூடாக்கி அரைத்து வைத்துள்ள பேரிச்சம்பழ பேஸ்ட்டை சேர்த்து சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் நன்றாக கிளற வேண்டும். இதனைத் தொடர்ந்து பால் பவுடர் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் கிளறிய பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த கலவை அனைத்தையும் பெரிய தட்டில் கொட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் கலவைக் கட்டியானதும் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்தால் பர்ஃபி ரெடியாகிவிடும். சுமார் 20 நிமிடங்களுக்குள் இந்த ரெசிபியை செய்துவிடலாம்.

இதுப்போன்று பேரிச்சம்பழத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் ரெசிபிகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் போது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். இதோடு நம்முடைய உணவுமுறையில் சர்க்கரையின் அளவையும் குறைப்பதற்கு உதவியாக இருக்கும். இதுவரை இப்படி டிரை பண்ணலேன்னா? இனி நீங்கள் இந்த ரெசிபியை உங்களது குழந்தைகளுக்கு செய்துக் கொடுங்கள்.

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com