இந்தியாவில் சுற்றுபயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 டி20 மற்றும் 3ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நேற்று இரவு 7 நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது.
9 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி கேசவ் மகராஜ் எடுத்த 41 ரன்களால் 100 ரன்களை கடந்தது. அந்த அணி இருபது ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்தது.இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெடையும், தீபக் சகர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். குறிப்பாக சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 ஓவர்களை வீசி அதில் ஒரு ஓவரை மெய்டன் செய்து வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்தார்.
107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த விராட் கோலியும் 3 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் இருவரும், கடைசி வரை நிதானமாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் இந்திய அணி 16.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், கே.எல்.ராகுல் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி கவுகாத்தியில் வரும் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.