டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது அக்டோபர் 23-ம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாட உள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்து கடும் விமர்சனத்தை பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி வரும் டி20 உலகக்கோப்பையில் வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கினற்னர்.
Also Read : சுரேஷ் ரெய்னா பிடித்த அற்புதமான கேட்ச்.. இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை 2022 தொடரிலிருந்து காயம் காரணமாக பும்ரா விலகல் என பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. பும்ரா முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடமால் இருந்தார். இந்நிலையில் காயம் குணமடைய சில மாதங்கள் ஆகும் என்பதால் அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக காத்திருப்பு வீரர்களான முகமது ஷமி அல்லது தீபக் சாஹர் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.