Doctor Vikatan: ஒருநாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்? | doctor vikatan – How much coffee and tea can you drink in a day

Share

Doctor Vikatan: ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்? எல்லோரும் பொதுவாக 3 – 4 என சொல்கிறார்கள். அளவு எவ்வளவு என்று குறிப்பிடுவதில்லை. அதிக காபி, டீ குடிக்க வேண்டாம் என அறிவுறுத்த அதில் சேர்க்கப்படும் பால் பிரச்னையா அல்லது கஃபைன் பிரச்னையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்
விகடன்

காபியோ, டீயோ…. ஒருநாளைக்கு ஒன்று முதல் இரண்டு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். ஒரு கப் என்பது 100 முதல் 150 மில்லி வரை இருக்கலாம். அப்படி அளந்து குடிப்பது சிறந்தது.

சிலர் பெரிய மக் நிறைய காபியோ, டீயோ குடிப்பார்கள். அந்தப் பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. கஃபைன் கலந்த பானங்களைக் குடிப்பதில் சில சாதகங்களும் உள்ளன, பாதகங்களும் உள்ளன. தவிர ஒவ்வொருமுறை நீங்கள் குடிக்கும் காபி, டீயில் சேரும் சர்க்கரையும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

உதாரணத்துக்கு, முறையாக வொர்க் அவுட் செய்யும் பழக்கமுள்ள நபர்கள், வொர்க் அவுட்டுக்கு முன் பால் சேர்க்காத பிளாக் காபி குடிப்பது நல்லது. அது வொர்க் அவுட்டுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கும். அதுவே களைப்பு, படபடப்பு போன்றவை உள்ளவர்கள் கஃபைன் அளவைக் குறைக்க வேண்டியது மிக முக்கியம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com