அடுத்த நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்! – News18 Tamil

Share

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மதுபோதையில் நடு ரோட்டில் விழுந்து கிடந்த பெற்றோரிடம் இருந்து 6 மாத குழந்தையை காவல்துறையினர் மீட்டு திருவண்ணாமலையில் உள்ள குழந்தை நல அமைப்பினரிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகர் பகுதியில் வந்தவாசியில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள பல் பொருள் அங்காடி அருகே இரவு, ஆண் குழந்தை ஒன்று தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தது.  அப்போது அங்கு கடை வைத்து இருந்தவர்கள் பல மணி நேரமாக குழந்தை அழுது கொண்டே உள்ளது என அருகில் சென்று பார்த்தபோது குழந்தை பசியால் அழுவது தெரியவந்தது.

பின்னர் அருகே குழந்தையின் தாய் மற்றும் தந்தை இருவரும் மதுபோதையில் சுயநினைவில்லாமல் கிழே விழுந்து கிடப்பதும் தெரியவந்தது. அதன் பிறகு கடைக்காரர்கள் தன்னார்வலர்களுக்கு தகவல் அளித்தனர்.  தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தன்னார்வ சேவை குழு நிர்வாகிகள் அசாரூதீன், கேசவராஜ் ஆகியோர், திருவண்ணாமலை குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர், அந்த குழந்தையை மீட்டு வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு பசியால் தவித்த அந்த குழந்தைக்கு உணவளிக்கப்பட்டது. தொடர்ந்து, மதுபோதையில் இருந்த பெற்றோரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மகாபலிபுரத்தை சேர்ந்த மோகன் வயது (28) , அனுஷ்யா வயது (23) மற்றும் அவர்களது குழந்தை மனீஷ் ( 9 மாதம்) என்பதும் தெரியவந்தது.

மேலும், கடந்த சில நாள்களாக இவர்கள் இருவரும் குடிபோதையில் வந்தவாசியில் சுற்றித்திரிந்துள்ளனர்.  குழந்தையை சரிவர கவனிக்காமல் இருந்து வந்ததும் தெரியவந்தது. எனவே, காவல்துறையினர் குழந்தை மனீஷையை குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து, வந்தவாசி காவல் நிலையத்துக்கு வந்த திருவண்ணாமலை குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த தினேஷ், புவனேஸ்வரி ஆகியோரிடம் குழந்தையை காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: நள்ளிரவு கடந்தும் செல்போனில் பேச்சு: தட்டிக்கேட்ட கணவனை கத்தியால் குத்திய மனைவி!

இதுகுறித்து சமூக சேவகர் அசாருதீன் சஜாத் என்பவரிடம் பேசுகையில்;குழந்தைகள் இல்லை என பல தம்பதியினர், வேதனை அடைவதுடன் அந்தந்த இன மதக் கடவுள்களை பிரார்த்தனை செய்தும் வருகின்றனர். ஆனால், தற்போது வந்தவாசி பகுதியில் இளம் தம்பதியர்கள் குடிபோதையில் தள்ளாடி நடு ரோட்டில் விழந்து கிடக்கின்றனர். இவர்கள் மட்டும் அப்படி விழுந்து கிடக்கவில்லை, அவர்கள் பெற்ற ஆறு மாத குழந்தையை கண்டுகொள்ளாமல் விட்டது மிகப் பெரிய வருத்தத்தை அளிக்கின்றது.

மேலும் படிங்க: தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகளில் இருந்து பிள்ளைகளை காப்பாற்ற முடியும். இதற்கு முன்பு மக்கள் குடிபோதைக்கு அடிமை ஆகாமல் இருந்தனர்.  அப்படியே குடித்தாலும் ஆண் நபர்கள் மட்டுமே குடித்து வந்தனர். ஆனால் தற்போது  பெண்களும் ஆண்களுக்கு நிகராக மது போதைக்கு அடிமையாகி வருகின்றனர்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

செய்தியாளர்: மோகன்ராஜ்- ஆரணி 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com