மிரட்டல் பேச்சு: கோவை மாவட்ட பாஜ தலைவர் கைது

Share

கோவை: எம்.பி.யை மிரட்டும் வகையில் பேசியது தொடர்பாக கோவை மாவட்ட பாஜ தலைவரை போலீசார் நேற்று கைது செய்தனர். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி சார்பில் கோவை பீளமேடு புதூர் பகுதியில் கடந்த 18ம் தேதி  ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கோவை மாவட்ட பாஜ தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேசும்போது ஆ.ராசா குறித்து சர்ச்சை ஏற்படும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து தபெதிக மாநகரத் தலைவர் சோமசுந்தரம் பீளமேடு போலீசில் அளித்த புகாரில், தந்தை பெரியார் பற்றி இழிவாக பேசியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை தொகுதிக்குள் நுழைய விடமாட்டோம் என்றும் அவரது உயிருக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்தும் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியுள்ளார்.

எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து பீளமேடு போலீசார் பாலாஜி உத்தம ராமசாமியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  பின்னர் பாலாஜி உத்தம ராமசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் கோவை  சிறையில் அடைத்தனர். இதை கண்டித்து கோவை அவினாசி சாலையில் பாஜவினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 285 பேரை போலீசார் கைது செய்தனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com