இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மொகாலியில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் 55 ரன்களை எடுத்தார்.
அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 71 ரன்களை விளாசினார்.சூர்யகுமார் யாதவ் 46 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி 209 ரன்களைக் குவிக்க ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் மோசமான பீல்டிங் மற்றும் பவுலிங்கினால் 19.2 ஓவர்களில் 211/6 என்று அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.
What a shot by KL Rahul. pic.twitter.com/jlF0dBIP6J
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 20, 2022
Reaction from Rohit Sharma after the shot from KL Rahul. pic.twitter.com/CHS3EilDy7
— Johns. (@CricCrazyJohns) September 20, 2022
கே.எல் ராகுல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அவர் 35 பந்துகளில் மூன்று சிக்சர் மற்றும் நான்கு பவுண்டரி என 55 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை அவர் கடந்தார். இதுவரை டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரராக பாபர் அசாம் முதலிடத்தில் இருக்கிறார்.
— Guess Karo (@KuchNahiUkhada) September 20, 2022
அவர் 52 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை அடித்தார். அதனைத்தொடர்ந்து விராட் கோலி 56 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை கடந்து இரண்டாவது இடத்திலும், அதனை தொடர்ந்து தற்போது கே.எல் ராகுல் 58 இன்னிங்ஸ்களுடன் 2000 ரன்களை கடந்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.