ஐபிஎல் தொடரை 5 முறை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த ஜெயவர்தனே அந்தப் பதவியிலிருந்து விலகினார். ரிலையன்ஸ்க்கு சொந்தமான 3 லீக் அணிகளின் செயல்திறன் மேற்பார்வையாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கான இயக்குநரகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Presenting आपले नवीन Head Coach – 𝐌𝐀𝐑𝐊 𝐁𝐎𝐔𝐂𝐇𝐄𝐑 💙
Paltan, drop a 🙌 to welcome the 🇿🇦 legend to our #OneFamily 👏#DilKholKe #MumbaiIndians @markb46 @OfficialCSA pic.twitter.com/S6zarGJmNM— Mumbai Indians (@mipaltan) September 16, 2022
இதனை சமூகவலைதளங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்த மார்க் பவுச்சர் தென்னாப்பிரிக்கா அணிக்காக 147 டெஸ்ட் போட்டிகள், 295 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் தென் ஆப்பிரிக்க அணியில் இருந்த பல முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி படு மோசமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது.
Also Read : பிஞ்ச் ஓய்வால் கேப்டனாகிறார் டேவிட் வார்னர்: தடையை நீக்க கோரிக்கை
இந்த நிலையில் தான் தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளராக பொறுப்பெற்ற பின் 11 டெஸ்ட், 12 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகள் வெற்றி தேடி தந்துள்ளார் . சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை இழந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் முடிவை மார்க் பவுச்சர் எடுத்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருடன் தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து தான் வரும் 2023ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆகாஷ் அம்பானி, மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக மார்க் பவுச்சரை வரவேற்கிறோம்.
வீரராக களத்தில் அவருக்கு இருந்த அனுபவம் மற்றும் பயிற்சியாளராகவும் அவருடைய அனுபவம் மும்பை அணிக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும். மும்பை இந்தியன்ஸ் அணியை இவர் மேம்படுத்துவார்” எனக் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.