Is Mohammed Shami a reserve player?- Former players | ரிசர்வ் வீரரா முகமது ஷமி?

Share

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் முகமது ஷமியை ஏதோ யு-19 பவுலர் போல் ரிசர்வ் வீரராகச் சேர்த்திருப்பது பெரிய சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. முன்னால் வீரர்கள் பலரும் சாடியுள்ளனர்.

1983 உலகக்கோப்பை வென்ற  அணியின் பிரதான பவுலர், பைனலில் ’புலி’ ரிச்சர்ட்ஸை வீழ்த்திய மதன்லால் கூறும்போது, “முகமது ஷமி மிகப்பெரிய பவுலர். ஆஸ்திரேலிய மண்ணில் அவரது பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்த கூடும். 15 பேர் அணியில் அவரை ஏன் சேர்க்கவில்லை என்பது புரியவில்லை. முதல் 3 ஓவர்களில் விக்கெட் வீழ்த்தக்கூடிய ஒரு பவுலர் அவர்.

உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் சிறந்த பந்து வீச்சு கூட்டணி இருக்க வேண்டியது அவசியமாகும். 180 ரன்களுக்கு மேல் குவித்தாலும் தரமான பந்து வீச்சாளர்கள் இல்லை என்றால் வெற்றி பெற முடியாது.

அணிக்கு 3 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய மண்ணில் சுழற்பந்து வீச்சாளர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியாது. குறிப்பிட்ட நாளில் அல்லது சாதகமான ஆடுகளம் இருக்கும் போது சுழற்பந்து வீச்சை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் ஒட்டுமொத்த தொடரில் வலுவான வேகப்பந்து வீச்சு இருப்பது அவசியமாகும். பும்ரா, ஹர்ஷல் பட்டேல் திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய தொடர்களின் போது இவர்களது உடல்தகுதி கண்காணிக்கப்படும்.

Read more: கோலியை ரிட்டையர் ஆகச்சொல்ல நீ யார்?- ஷாகித் அப்ரீடிக்கு வலுக்கும் எதிர்ப்பு

இளம் பவுலர் அர்ஷ்தீப் சிங் நன்றாக கற்று வருகிறார். புவனேஷ்வர்குமாரும் இருக்கிறார். ஆனாலும் ஷமியையும் தேர்வு செய்திருக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த அவருக்கு ஆஸ்திரேலிய பிட்ச்கள் சாதகமாகவே இருக்கும். அதே 1983 உலகக்கோப்பை நாயகன் ஸ்ரீகாந்த் கூறும்போது, பவுன்சுடன் கூடிய ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஷமியால் அசத்த முடியும். அவருக்கு அணியில் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும், என்றார்.

முகமது அசாருதீன் கூறும்போது, “ஸ்ரேயஸ் அய்யர், முகமது ஷமி பிரதான வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியமளிக்கிறது. தீபக் ஹூடாவுக்குப் பதில் ஸ்ரேயஸ் அய்யரும், ஹர்ஷலுக்குப் பதில் ஷமியும் வர வேண்டும்” என்றார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com