ஆசிய கோப்பைக்குப் பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. ஆசியக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட அணியிலிருந்து உலகக்கோப்பைக்கான அணியில் சிறிய மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருந்தது.
One title 🏆
One goal 🎯
Our squad 💪🏻#TeamIndia | #T20WorldCup pic.twitter.com/Dw9fWinHYQ
— BCCI (@BCCI) September 12, 2022
டி20 உலகக்கோப்பையில் காயம் காரணமாக ஜடேஜா இடம்பெறவில்லை. அவருக்குப் பதில் அக்சர் படேலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆவேஷ் கான், பிஷ்னோய்ற்கு பதிலாக ஆசியக் கோப்பையில் காயாம் காரணமாக விளையாடாத பும்ரா, ஹர்ஷல் படேல் அணிக்குத் திரும்பி வந்துள்ளனர்.
Also Read : டி20 உலகக்கோப்பை: வலுவான இந்திய அணி அறிவிப்பு
முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் காத்திருப்பு வீரர்களாக உள்ளனர். இந்த அணிக்குத் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. கடந்த ஐபிஎல்லில் அதிவேக பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறவைத்த உம்ரான் மாலிக் இந்த அணியில் இடம்பெறவில்லை. சீனியரான ஷமியே காத்திருக்கும் வீரராகத் தான் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் முஸ்லீம்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா என ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.
Destruction , Politicisation of Indian Cricket is complete
No more Muslim or minority players in Team IndiaGujju players got a Jack in BCCI
The End 🙏🏽🇮🇳
— Proud Secular (@ProudSecular) September 14, 2022
This is the Indian squad for T20 World Cup. For the first time no muslim player is a part of the team. This is not the India of Nehru’s dreams. This is a fall of one more institution build over the years. #BCCI #T20WorldCup #IndianCricketTeam #ViratKohli # https://t.co/pGhCpfH5gH
— Ashutosh Mishra (@coolswim2) September 12, 2022
For T20 World cup Indian Cricket team has been nominated. Being a muslim @JayShah and his @BCCI has not selected one of the best Indian Bowler @MdShami11 A very bad politics are being played in India cricket Team. Remove @JayShah as a chairman. #ShameonyouJayshah @T20WorldCup
— Zishan Bari Khan (@zishanbari) September 12, 2022
அர்ஷதீப் சிங்கிற்கு பதிலாக சீனியரான முகமது ஷமிக்கோ அல்லது ஐபிஎல்லில் நன்றாக விளையாடிய உம்ரான் மாலிக்கிற்கோ ஏன் வாய்ப்பளிக்கவில்லை எனப் பலர் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் சிலர் சிராஜ் அணியில் சேர்த்திருக்கலாம் எனவும் தங்களது கருத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் இன்னும் சிலரோ அணியில் இடது கை பந்துவீச்சாளர் தேவை என்பதால் அர்ஷதீப் சிங் அணிக்கு உதவுவார். ஆசியக் கோப்பையிலும் கூட அர்ஷதீப் சிங் இறுதி நேரத்தில் நன்றாகவே பந்துவீசினார். அணியில் எந்த வித பாகுபாடும் இல்லை என தங்களது கருத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.