இங்கிலாந்திடம் தோல்வி – தெ.ஆ.பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ராஜினாமா – News18 Tamil

Share

இங்கிலாந்திற்கு எதிராக சமீபத்தில் முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 1-2 என்று இழந்ததையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் தென் ஆப்பிரிக்காவின் பயிற்சிப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக பயிற்சியாளர் மார்க் பவுச்சர் அறிவித்துள்ளார்

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான பவுச்சர் டிசம்பர் 2019 முதல் பயிற்சியாளர் பதவியை வகித்து வருகிறார். இந்த காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 11 டெஸ்ட், 12 ஒருநாள் மற்றும் 23 டி20 வெற்றிகளை பெற்றுள்ளது. மார்க் பவுச்சர் எங்களைவிட்டு பிரிவது வருத்தமாக உள்ளது. ஆனாலும் அவரது விருப்பத்திற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். மார்க் ஒரு ஜாம்பவான் என்று தென் ஆப்பிரிக்க தலைமை நிர்வாக அதிகாரி ஃபோலெட்சி மெசெகி தெரிவித்தார்.

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியைல் 2ம் இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு இறுதி  வாய்ப்பு நிச்சயம் உள்ளது. பவுச்சரின் ஒப்பந்தம் 2023 ஐம்பது ஓவர் ஐசிசி உலகக்கோப்பை தொடர் வரை உள்ளது.  மார்க் பவுச்சர் டி20 உலகக்கோப்பையுடன் தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு இன்னொரு காரணம் புதிய தென் ஆப்பிரிக்கா டி20 லீகில் மும்பை இந்தியன்ஸின் அல்லது ரிலையன்சின் எம்.ஐ. கேப்டவுன் அணிக்கு பயிற்சிப்பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் என்று தெரிகிறது.

இவர் மீது நிறவெறிக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டது, ஆனால் இவர் நிறவெறியாளர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. நிறவெறி ரீதியாகப் பாகுபாடு காட்டும் அணிப்பாடல் விவகாரம் ஒன்றில் பவுச்சர் ஈடுபட்டதும் இவர் ஒருநிறவெறியாளர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவே இருந்தது. இவர் பயிற்சியின் கீழ்தான் ‘கருப்பர்களின் உயிர் முக்கியம்’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தென் ஆப்பிரிக்க அணியில் உள்ள வெள்ளை வீரர்கள் முழங்காலிட்டு ஒற்றுமையை வலியுறுத்தும் சிம்பாலிக் செய்கையை செய்ய மறுத்தனர்.

Also Read: ‘எங்களை விட்டு இத்தனை விரைவில் போய்விட்டீர்களே வார்னி!’- ஷேன் வார்ன் பிறந்த நாளில் சச்சின் உருக்கம்

குவிண்டன் டி காக் இந்தச் சர்ச்சையில் ஒரு போட்டியில் உட்கார வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இந்த விவகாரங்களுக்கு இடையே இப்போது பவுச்சர் பயிற்சியாளர் பதவியைத் துறந்து எம்.ஐ. கேப்டவுன் அணியின் ஒட்டுமொத்த நிர்வாகியாகச் செல்லவிருக்கிறார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com