பாக்., ஆப்கான் வீரர்களுக்கு எச்சரிக்கையுடன் அபராதம் – News18 Tamil

Share

ஆசிய கோப்பை தொடரில் மோதலில் ஈடுபட முயன்ற பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆசியகோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் லீக் சுற்றில், ஆப்கானிஸ்தான் வீரர் ஃபரீத் அகமதுவை, பாகிஸ்தான் அணி வீரர் ஆசிப் அலி, பேட்டால் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, இருவருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 25 சதவீதம் தொகையை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

அன்றைய தினம் ஆப்கானுக்கு இருதயத்தில் இடி இறங்கியது போல நசீம் ஷா கடைசியில் ஃபுல்டாஸ்களை 2 சிக்சர்களாக ஸ்டேடியத்துக்கு அனுப்பி த்ரில் வெற்றி பெற்ற போட்டியில் ஃபரீத் அஹ்மத் வீசிய 19 ஆவது ஓவரின் 4ஆவது பந்தை சிக்ஸருக்கு அடித்து பவுலரை முறைத்து பார்த்தார் ஆசிப் அலி. பதிலுக்கு ஃபரீத் அஹ்மதும் ஆசிப் அலியை முறைத்து பார்த்தார். இந்த நிலையில், அடுத்த பந்திலேயே ஆசிப் அலி, ஃபரீத் அஹ்மதிடம் விக்கெட்டை பறி கொடுத்தார்.

இந்த விக்கெட் போனதும் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி ஆப்கானிஸ்தான் பவுலர் ஃபரீத் அஹ்மத்தை பேட்டால் தாக்க சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், முதலில் ஃபரீத் அஹ்மத்தான் ஆசிப் அலி முகத்திற்கு அருகே போய் மோசமாக நடந்து கொண்டார். அவரின் முகத்திற்கு முன் கையை நீட்டி திமிராக கொண்டாடினார்.

அதோடு ஆசிப் அலி திரும்பி செல்லும் போது அவரின் முதுகில் முட்டுவது போல ஃபரீத் அஹ்மத் நெஞ்சால் முட்டினார். இதனால் கோபம் அடைந்த ஆசிப் அலி, திரும்பி பார்த்து அவரை அடிப்பது போல சென்றார். இதற்கு அவரும் சண்டைக்கு வா என்று மல்லுக்கு நின்றார். இதற்கு பதிலடி தரும் விதமாக ஆசிப் அலியும் பேட்டை தூக்கிக்கொண்டு அவரை தாக்குவது போல சென்றார். அதற்குள் ஆப்கானிஸ்தான் வீரர்கள் வந்து இரண்டு தரப்பிற்கும் சமாதானம் செய்தனர்.

Read more: முகமது ஷமி அணியில் இல்லை என்பது எனக்கு பெரிய அதிர்ச்சி – ரவி சாஸ்திரி

இந்த விவகாரம் போதாதென்று ஆட்டம் முடிந்த பிறகு ஆப்கான் ரசிகர்களுக்கும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டு ஆப்கான் ரசிகர்கள் பாகிஸ்தான் ரசிகர்களைப் போட்டுத்தாக்கும் வீடியோவும் கிரிக்கெட் உலகில் பேரதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com