பாலியல் வன்கொடுமை புகாரில் அதிரடி – News18 Tamil

Share

ஐபிஎல் ஆடிய நேபாள் கிரிக்கெட் கேப்டன் சந்தீப் லமிச்சேனுக்கு பாலியல் வன்கொடுமை புகாரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லமிசேனை சஸ்பெண்ட் செய்து நேபாள் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
சந்தீப் லமிச்சானே மீது கவுசாலா பெருநகர காவல் துறையிடம் 17 வயது  சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் கூறியுள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

நான் சந்தீப்பின் தீவிர ரசிகை. அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் வழியே தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். என்னை சந்திக்க வேண்டும் என முதன்முதலில் அவரே என்னிடம் ஆவலுடன் கூறினார் என அந்த சிறுமி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

மேலும், தன்னை 2 முறை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார் என்றும் அந்த புகாரில் தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி காத்மண்டு பள்ளத்தாக்கு பகுதியின் காவல் துறை உயரதிகாரி ரவீந்திர பிரசாத் தனூக் கூறும்போது,

இதுபோன்ற தீவிர சம்பவங்களில் போலீசார் அதிக கவனம் செலுத்தி விசாரணை நடத்துவார்கள். சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தியுள்ளோம். வழக்கு பதிவாகி உள்ளது. விசாரணையையும் முடுக்கி விட்டுள்ளோம், என்றார்.

Read more: துபாய் – மும்பை ஏர் இந்தியா விமான டிக்கெட் விற்றுத் தீர்ந்தது – இந்திய அணியை கேலி செய்த இலங்கை பத்திரிகையாளர்

புகாரின்படி, கடந்த ஆகஸ்டு 21-ந்தேதி பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 17-வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார் பதிவானதை அடுத்து 2 நாட்கள் விசாரணை நடந்த நிலையில் நேபாள கேப்டன் சந்தீப் லமிச்சானை இன்று கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தீப் லமிச்சேன் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கபடுகிறது. ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக சந்தீப் லமிச்சேன் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com