make green chilli chutney recipe

Share

பச்சை மிளகாய் காரம்தான் என்றாலும் அதன் நன்மைகள் எண்ணற்றது. எனவே அதன் காரம் தெரியாமல் அதேசமயம் அதன் நன்மைகளையும் பெற வேண்டுமெனில் இந்த சட்னியை அரைத்து சாப்பிட்டுப் பாருங்கள். ரெசிபி இதோ…

தேவையான பொருட்கள் :

பச்சை மிளகாய் – 10

சின்ன வெங்காயம் – 15

உளுந்து – 1 tbsp

பூண்டு – 6

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

சமையல் எண்ணெய் – 2 tbsp

உப்பு – தே.அ

தாளிக்க :

கடுகு – 1/2 tsp

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

பின் நறுக்கிய பச்சை மிளகாய் , பூண்டு சேர்த்து வதக்கவும் நன்கு வதக்கியபின் இறக்குவதற்கு முன் புளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

நட்ஸ் பாயாசம் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா..? சிம்பிளான ரெசிபி இதோ….

அடுப்பை அணைத்து விட்டு ஆறியதும் கெட்டிப்பதத்தில் அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் தாளிக்க கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்த விழுதில் கொட்டவும்.

அவ்வளவுதான் பச்சை மிளகாய் சட்னி தயார்.

 

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com