வரலாற்றை மாற்றி எழுதும் 23 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘சூப்பர் கண்ட’ டைனோசர்

Share

  • ஷிங்கை நியோகா & ஆலிவர் ஸ்லோ
  • பிபிசி நியூஸ், ஹராரே & லண்டன்

எம்பிரேசரஸ் ராதியின் மாதிரி வடிவம்

பட மூலாதாரம், ANDREY ATUCHIN / VIRGINIA TECH

படக்குறிப்பு,

எம்பிரேசரஸ் ராதியின் மாதிரி வடிவம்

230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆப்ரிக்காவின் பழமையான டைனோசரின் எச்சங்களை ஜிம்பாப்வேயில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எம்பிரேசரஸ் ராத்தியின் (Mbiresaurus raathi) என்று அழைக்கப்படும் இந்த டைனோசர், ஒரு மீட்டர் உயரம் கொண்டதாகவும், இரண்டு கால்களில் ஓடியதாகவும், நீண்ட கழுத்து மற்றும் கூர்மையான ஒழுங்கற்ற பற்கள் கொண்டதாகவும் இருந்தன.

நான்கு கால்களில் நடக்கும் சௌரோபோட் (sauropod) என்ற இனத்துடன் சம்பந்தப்பட்ட சௌரோபோடோமார்ப் (sauropodomorph) வகையைச் சேர்ந்தது இது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஜாம்பேசி (Zambezi) பள்ளத்தாக்குக்கு இரண்டு முறை ஆய்வுப்பயணம் மேற்கொண்டப்போது, விஞ்ஞானிகள் இதன் எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்தனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com