pakistan senior player said rohit sharma will lost his captaincy soon – ‘விரைவில் ரோஹித் சர்மா கேப்டன்சியிலிருந்து அகற்றப்படுவார்’

Share

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்  மூத்த பேட்ஸ்மேன் மொகமது ஹபீஸ், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விரைவில் அவரது கேப்டன்சியை இழப்பார், அவரது உடல்மொழி சரியாக இல்லை, தொய்வாக உள்ளது என்று அதிர்ச்சிக் கருத்தை தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங்கை 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்ற பிறகு ஹபீஸ் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். ஹபீஸ் கூறியதாவது: ரோஹித் சர்மா வெளிப்படுத்திய உடல் மொழியைப் பாருங்கள், மேட்ச் முடிந்தவுடன் அவரது உடல் மொழி சரியாக இல்லை. டாஸ் போட வரும்போதே ரோஹித் சர்மா மந்தமாக வருகிறார். இதே ரோஹித் சர்மாதான் சில நம்ப முடியாத அதிரடி இன்னிங்ஸ்களை ஆடியவர். அவரா இவர் என்பது போல் இருக்கிறது கேப்டனான அவரது உடல் மொழி.

கே.எல்.ராகுலை நீக்க வேண்டும் என்கிறீர்களா? நிருபரை மடக்கிய சூரியகுமார் யாதவ்

கேப்டன்சி அவருக்கு சுமையாக இருக்கிறது. அவரது பார்மும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஐபிஎல்-ல் தொடரிலும் அவர் மோசம். அதன் பிறகே சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவர் திரும்பியதிலிருந்து அவருக்கு எதுவும் சரியாக அமையவில்லை.

ஆனால் அவர் என்னடாவென்றால் ‘நாங்கள் பாசிட்டிவ் கிரிக்கெட் ஆடுவோம்’ அது இது என்று பேசி வருகிறார்.

ஆனால் பேச்சில் தெரியும் பாசிட்டிவ் அவரது செய்கையில் வெளிப்படவில்லை. பாசிட்டிவ் கீசிட்டிவ் அது இது என்று பேசி விடலாம் ஆனால் நடைமுறையில் அதெல்லாம் கடினம். இது என் கணிப்பு அல்ல, அவர் கேப்டன்சியில் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என்று கருதுகிறேன்.

டி20 உலகக்கோப்பை இங்கிலாந்து அணி அறிவிப்பு: அதிரடி வீரர் நீக்கத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

அவர் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்திருக்கிறேன், ஆனால் இப்போது அவர் தன்னை அம்மாதிரி வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. எதையோ தொலைத்தவர் போல் காணப்படுகிறார். அவர் மீது ஏகப்பட்ட அழுத்தம் உள்ளது, அவருக்காக வருந்துகிறேன்.

இவ்வாறு கூறினார் ஹபீஸ்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com