ஆனால் ஹாங்காங் அணியில் அவர்கள் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் அல்ல, ஆனால் நிச்சயம் பெரிய ஃபைட் கொடுப்பார்கள். ஹாங்காங் அதிகம் சமீபமாக டி20க்களில் ஆடவில்லை என்பதும் அந்த அணிக்கு ஒரு சாதகமற்ற நிலைதான். ஹாங்காங்கை வெற்றி பெறுவது முக்கியமல்ல, எப்படி வெற்றி பெறுகிறோம் என்பதுதான் முக்கியம்.
விராட் கோலி இப்போதுதான் ஒரு மாதம் பேட்டை தொடாமல் வந்து அன்று பாகிஸ்தானுக்கு எதிராக செம தடவு தடவினா, ரோஹித் சர்மா கையில் கொடுத்து விட்டுச் சென்றார். இருவரும் வலைப்பயிற்சியை புறக்கணித்தனர். 2007-ல் ஜமைக்காவில் பாகிஸ்தானுக்கும் 2011-ல் பெங்களூருவில் இங்கிலாந்துக்கும் அதிர்ச்சியளித்த அயர்லாந்து வீரர் ட்ரெண்ட் ஜான்ஸ்டன்தான் இப்போது ஹாங்காங்கின் பயிற்சியாளர்.
Also Read: இந்தக் கோலியும் ரோஹித் சர்மாவும் இப்படி செய்திருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் விமர்சனம்
அணிகளைப் பொறுத்தவரை இன்று ரிஷப் பண்ட் களமிறங்க வாய்ப்பு உள்ளது. வலையில் யார்க்கர் லெந்த் பந்துகளையெல்லாம் அவர் வலைப்பயிற்சியில் அடித்து விளாசி வருகிறார். ரிஷப் பண்ட் சரியான பார்மில் இருக்கிறார். ஹாங்காங் அணியில் கேப்டன் நிஜாகத் கான், 4 ஆண்டுகளுக்கு முன் இந்தியப் பந்து வீச்சை புரட்டி எடுத்து சதம் எடுப்பதற்கு அருகில் வந்தார். 3 வாரங்களுக்கு முன்புதான் ஜெர்சி அணிக்கு எதிராக சதம் விளாசினார். ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் ஓமானுக்கு எதிராக அரைசதம் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இந்திய அணியில் இன்று ரிஷப் பண்ட்டை கொண்டு வர வேண்டுமென்றால் ஒன்று சூரியகுமார் உட்கார வேண்டும் அல்லது விராட் கோலி உட்கார வேண்டும், கோலிக்கு பெஞ்ச் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும். ஆனால் சூரியகுமார் தலையில்தான் கோடாரி விழும் என்று தெரிகிறது.
இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், ஆவேஷ் கான், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங்.
ஹாங்காங் அணி: நிஜாகத் கான் (கே), பாபர் ஹயாத், யாஸ்மின் முர்டாசா, கின்சித் ஷா, ஸ்காட் மெக்கெனி (வி.கீ), ஹாரூன் அர்ஷத், அய்ஜாஜ் கான், ஜீஷன் அலி, ஈசான் கான், ஆயுஷ் ஷுக்லா, முகமது கஜன்ஃபார்.
இந்த ஈசான் கான் தான் 2018-ல் ரோஹித் சர்மா, தோனி இருவரையும் அவுட் ஆக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.